பக்கம்:பிள்ளைக்கலி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 6 கொடுத்த "என்னைக் காப்பாற்ற, நடந்து வந்தாயோ?” என்ற பாட்டைத் தன் மழலை மொழியால் திக்கித் திக்கிப் பாட ஆரம்பித்துவிட்டது: ராமனின் முகத்தில் புதியதோர் பிரகாசம் சுடர்விட்டது. இதைப் பார்த்த ஒரு வயதான கிழவி அவனிடம் நெருங்கிவந்தாள். எதையோ சொல்ல வந்தாள்; ஆனால் நினைத் ததை அந்த ஆனந்தப் பரவசத்தில் மறந்துவிட்டாள். சிரித்துக் கொண்டே மறந்ததை ஞாபகப் படுத்திப் பார்த்தாள். எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அவள் ராமனைப் பார்த்து, மிகமிக வாஞ்சையுடனும் வாத்ஸல்யத்துடனும், ராமா! நீ எங்கள் ஊரிலேயே இருந்துவிடேன்' என்ருள். ராமன் சிரித்தான். 'பாட்டி இங்கே நீ இருக்கிருய் அல்லவா? நான் இருந் தாலும் ஒன்றுதான்; நீ இருந்தாலும் ஒன்றுதான் பாட்டி’ என்ருன் ராமன். அப்போது பூவுலகின் நாற்றிசைகளிலும் பெருமழை காலூன்றிப் பெய்ய ஆரம்பித்தது.