பக்கம்:பிள்ளைக்கலி.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌莎 வேலேயாள் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் சிதம்பரம், சரி, சரி போய் அந்த ஆளே அழைத்து வா, நீ ஒன்றும் சமாதானம் சொல்ல வேண்டாம்' என்று சொன்னன். விடுதி வேலையாள், சிதம்பரத்தைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்து அனுபவப்பட்டவன். ஆதலால், அவன் சிதம் பரத்தின் சடபுடலுக்குச் சிறிதும் அஞ்சாமல், சாவதானகாகவே பதில் கூறத்தொடங்கினன். 'இல்லை, சார்; நான் அதெல்லாம் கேட்காமையா, உங்களிடம் வந்து சொல்லுவேன்னு நினைச்சிங்க? கந்தசாமி உடையாருன்ன நீங்க தெரிஞ்சிக்குவீங்கன்னு சொன்ஞர். உங்க ஊரிலேயிருந்துதான் வாருராம். முகஜாடையை பார்த்தா உங்க அப்பலா யிருக்குமோன்னு...!" - சிதம்பரம் பதட்டத்துடன், நிறுத்துடா, உன் அதிகப் பிரசங்கத்தை போ; அந்தக் கிழவனே நானே போய்ப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே கூப்பிட்டு வரவேண்டாம்!” என்று உரைத்தவாறே, கையிலிருந்த கழற்காயைப் போட்டுவிட்டு எழுத்தான். - 'என்ன சிதம்பரம், கேமை நடுவே விட்டுட்டுப் போகிருய்?....' "எவனே ஊரிலிருந்து வந்திருக்கான்னு சொன்னதுமே ஒடுகிருயே!” "பியூன் சொன்னனே, இவன் அப்பா போல இருக்கிறது என்று. அதாண்டா அலறியடித்துக்கொண்டு ஒடருன். பாதர்'ஞ. பாசம் இருக்காதாடா!' இவ்விதமாக, சகாக்கள் சிதம்பரத்தைக் கோட்டா' பண்ணினர். சிதம்பரம் எரிச்சலோடு "எந்தப் புளுட்டோ, பார்த்து விட்டு வருகிறேன். பிரதர்! ஒரே நொடியில் வந்து விடுகிறேன்: என்று கூறிவிட்டு விரைந்து வெளியேற முயன்றன். இதற்குள் வேலையாள் குறிப்பிட்ட கிழவர், சிதம்பரம், சிதம்பரம்...! எங்கே இல்லையா, பிள்ளையாண்டான்? என்று கேட்டுக் கொண்டே உள்ளே அடியெடுத்து வைத்தார். அவர் கையில் பிடித்து, ஊன்றி வந்த தடி, தட், தட் எனச் சப்தம் செய்தது. ~. -