望岛 கிழவரைக் கண்டதுமே, சிதம்பரம் திகைத்து நின்றுவிட் டான். அவன் முகத்தில் குபீரென ரத்தம் ஏறியது. வந்த கிழவர் அவனுடைய தந்தைதான். வேலையாள் பெயரைச் சொன்னபோதே, சிதம்பரம் தன் தகப்பளுர்தான் வந்திருக்கிருர் எனத் தெரிந்து கொண்டானுயினும், நேரில் பார்த்ததுமே எதிர் பாராததொன்றைக் கண்டதுபோல் அதிர்ச்சி கொண்டான். ஏனென்ருல், அவன் இருக்கும் டாம்பீக நிலைக்குப் பட்டிக்காட்டு ஆளாகப் பஞ்சைக் கோலத்தில் தந்தை வந்திருப்பதை அவமான மாகக் கருதின்ை. அவன் அஞ்சியது போலவே, அவனுடைக சிநேகிதர்கள். கிழவர் முழங்காலுக்குமேல் வேட்டியும், உடம்பில் குருத்தாவும், தலையில் ஐதர் காலத்துப் பாகையும் உடுத்தியிருந் ததையும், காதுகளில் சிவப்புக்கல் கடுக்கனும், இடக்கை விரல் ஒன்றில் பஞ்ச லோகத்தாலாகிய மோதிரம் அணிந்திருந்ததையும் கண்டு நையாண்டி செய்து கொண்டிருந்தனர். இந்த அவமான உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஆத்திரத்தை எழுப்பியது. 'யாரது ?’ என்ற அதட்டலுடன், கிழவர் உள்ளே வருவதைத் தடுத்து நிறுத்துவது போல், எதிரே போனன். 'நான்தான் அப்பா!' என்று குழைவுடன் கூறிய கிழவர். 'சிதம்பரமா, அது ?" என்று கேட்டவாறு தடியை இடக்கையில் மாற்றிக்கொண்டு வலக்கையை நெற்றிமேல் வைத்து நிமிர்ந்து சிதம்பரத்தைப் பார்க்கலாஞர். x. "ஆமாம், இவர்தான். இவரைத்தானே நீங்க கேட்டீங்க, பெரியவரே?' என்று கதவண்டை நின்றிருந்த வேலையாள் கேட்டு, ஆளே இனங்காட்டினன். ‘'நீ போய் உன் வேலையைப் பாருடா!' என்று சிதம்பரம் அவன்மீது சீறி விழுந்தான். 'அறிமுகப்படுத்த வந்துவிட்டான்' என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டு, தகப்பளுரைப் பார்த்து, சரி. சரி; இப்படி வா’ என்று தன் அறைக்குள் கூப்பிட்டுக் கொண்டு போனன். மகனின் வெடுவெடுப்பைக் கவனியாத கந்தசாமி உடையார் அவன் பின்னே தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்ருர், தன் அறையை அடைந்ததுமே சிதம்பரம் கதவைத் 'தடாலென்ச் சாத்தினன். அவன் கோபம் உச்சநிலையை அடைந் திருந்தது. கண்ணுலேயே எரித்து விடுபவன்போல் தகப்பளுரைப் பார்த்து, 'என்ன சமாச்சாரம்? ஏன் இங்கே வந்தாய்? என்று கேட்டான். - *ン * 4
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/47
Appearance