பக்கம்:பிள்ளைக்கலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


"ஆமாம்; வந்தது யாருடா? உங்க அப்பாவா? ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தியே! என்னவாம் சமாச்சாரம் ? என்று கேட்டான் சுதர்சனம். ஒன்றுமில்லை. எங்க அப்பா கழனிக்கு ஒரு பம்பிங் மெஷின் வாங்கியனுப்பச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டிருக்கிருர்’ என்று சிறிதும் தயங்காமல், சமயோசிதமாகப் பதிலளித்தான். அப்படியானல், வந்த ஆள் உங்க அப்பா இல்லையா?" ' என்னடா, மடையன் மாதிரி உளறுகிருய் எங்கள் பண்ணையாளைப் போய் அப்பா என்கிருயே!” - அப்போதுதான் அந்த அரையைக் கடந்து போய்க் கொண்டிருந்த கந்தசாமி உடையாரின் காதில் சிதம்பரம் சொல்விய இச் சொல் விழுந்தது. அவர் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். தம்மைச் சமாளித்துக் கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. 'நான் பண்ணையாளாமே ? - ஆமாம்; அவன் இருக்கிற டிக்'குக்கு என்னே அவன் அப்பா என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகத்தான் இருக்கும் ?’ என்று அவர் தாமாகவே சொல்லிக்கொண்டு நடக்கலானர். கந்தசாமி உடையாருக்குக் கொஞ்சத்தில் மனம் ஆறுத லடையவில்லை. மகனைப் பார்க்கப்போன இடத்தில் ஏற்பட்ட அனுபவத்தையும் அவமானத்தையும் அவர் வழிநெடுக எண்ணிக் கொண்டே போனுர், அந்தக் கல்லூரியில் படிக்கிறவர்கள் எல்லாம் சீமான் வீட்டுப் பிள்ளைகள்தான? என்னைப் போல ஏழைகளின் பிள்ளைகள் ஒருவர் கூடப் படிக்கவில்லையா? அவர்களைப் பார்க்கப் பெற்ருேர் வருவதில்லையா ? அப்படி வருபவர்கள் எல்லாம் பகட்டும் படாடோபமுமாகவா இருப்பார்கள் ? இக் கேள்விகள் அவருடைய நொந்த உள்ளத்திலிருந்து எழலாயின. ‘என்ன காலம் இது ? மேனுட்டுப் படிப்பும் நாகரிகமும், பெற்ற தகப்பனைப் பண்ணையாள் என்று சொல்லச் செய்கின்றன. இப்படி என்னச் சொல்வதற்குத்தான இவனே இவ்வளவு தொல் லைப்பட்டுப் படிக்கவைத்து வருகிறேன்? எப்படி இருந்தவன் படி ஆய்விட்டான் காலேஜ் படிப்பும் பட்டண வாசமும் ஆன அடியோடு மாற்றிவிட்டனவே! பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு ஆவலாக வந்தேன் ? பரிவோடு பார்க்கவந்த தகப்பன. 'வா, அப்பா!' என்று அன்புடன் வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/50&oldid=1395666" இலிருந்து மீள்விக்கப்பட்டது