உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


வேற்று உபசரித்தான ஊரில் அம்மா எல்லாம் செளக்கியமா ?” என்று ஆதுரத்துடன் விசாரித்தான ? ஊகும்; - இதெல்லாம் கேட்காமல் போனுலும் பரவாயில்லே. ஏன் இங்கே வந்தாய் ?” என்றல்லவா கேட்டான் ? இப்படிக் கேட்க அவனுக்கு மனம் எப்படி வந்தது ? பெற்று வளர்த்த தகப்பன் வந்து பார்க்கிறதை அவமானம் எனக் கருதுகிறவன் - தந்தையைச் சிநேகிதர்களுக்கு "எங்கள் பண்ணையாள்' எனச் சொன்னவன் - ஏன் வந்தாய் ? என்று மட்டுத்தானு கேட்பான் ? அதற்கு மேலும் கேட்பான், ஊம் ; இவனே ஆளாக்க - படிக்க வைத்துப் பெரியவளுக்க - என்ன பாடுபட்டேன் ? - எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண் டேன் ?....... இவ்விதம் எண்ணியபோதே அவர் கண்களில் நீர் நிரம்பி வழிந்தோடியது. கந்தசாமி உடையார் சிதம்பரத்தை வளர்க்கச் சிரமப் பட்டதைப் போல, பாடுபட்டவர்கள் அதிகம்பேர் இருக்க மாட் டார்கள். இவருக்குச் சிதம்பரம் மட்டும் பிள்ளையாய் இருந் திருந்தால், ஒரேபிள்ளை; அதனுல்தான் அருமையாக வளர்க்கிருர் என்று சொல்லலாம். அவருக்கு அவன் மட்டுமல்ல; மற்றும் இரு ஆண்களும், நான்கு பெண்களும் இருக்கின்றனர். அப்படியிருந்தும், அவர் அவன் விஷயத்தில் மட்டும் எல்லா வகையிலும் விசேட சிரத்தை காட்டி வரலாஞர். கந்தசாமி உடையார் ஏழையாலுைம் கல்விச் செல்வம் வாய்ந்தவர். நல்ல தமிழ் இலக்கியப் புலமை அவருக்கு இருந்தது. அதனுல் அவர் பண்ணுருட்டி மக்களால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். ஊர் நாட்டாண்மைக்காரர் உட்பட எல்லோரும் உடையாரிடம் மரியாதை காட்டி வந்தனர். அவருடைய நற்பண்பும் நல்லொழுக்கமும் பிறரை வெகுவாகக் கவர்ந்தன. கந்தசாமி உடையார் மண்பாண்டங்கள், பொம்மைகள் செய்து விற்று, அதன் வருவாயைக் கொண்டு குடும்பத்தையும் கெளரவமாக நடத்தித் தம் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து வந்தார். அவர் சம்பாதனையில் பெரும் பகுதி சிதம்பரத்தின் படிப்புக்குத்தான் செலவாயிற்று. அவனை ஆங்கிலக் கல்வியில் உயர்தரப் பட்டம் பெறச் செய்து, சர்க்கார் உத்தியோகத்தில் தகுந்தபடி அமர்த்த வேண்டுமென்பது அவருக்கு ஆசை. லேயே, தள்ளாமையில்ை, முன்போ திக்க முடியாமலிருந்தும். நகைதட்டுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/51&oldid=1395667" இலிருந்து மீள்விக்கப்பட்டது