54
அடைமானம் வைத்தும், சிதம்பரத்தைச் சென்னைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.
இவ்வளவு ஆசாபாசத்துடன் சிரமப்பட்டுப் படிக்கவைத்த பிள்ளை தம்மைத் தகப்பனென்று சொல்ல வெட்கப்படுகிரு னென்ருல் - ஏன் வந்து மானத்தை வாங்குகிருய் ? என்று கேட்கிருனென்ருல், - அதை அவரால் எப்படிப் பொறுக்க முடியும் இந்தப் பட்டிக்காட்டுத் தந்தையில்லாமல், இவன் எப்படிப் பட்டணத்திலே பட்டப் படிப்புப் படிக்க வந்து விட்டான் ? இவன் சொன்னபடி பண்ணையாள் போன்றிருக்கும் என்னுடைய பணத்தைக் கொண்டுதானே சீமான்களின் பிள்ளைகளோடு சீமானுய் உலவி வருகிருன். நான் ஒருமாதம் பணம் அனுப்பா விட்டால் இவன் ஜம்பமும் டாம்பீகமும் என்னுகும் ? ஊம்; இருக்கட்டுமே ......' என்று அவர் தமக்குள் கறுவிக்கொண்டார்.
வேங்கடாசல உடையார் பங்களாவில் நடந்த திருமண வைபவம் புதுச்சேரி முழுவதுமே கலகலப்பை உண்டுபண்ணியது. பொதுவாக, கலியாணச் சிறப்பைப்பற்றியும், அதன் ஒவ்வொரு அம்சத்தைக்குறித்தும் அதில் கலந்துகொண்டவர்களும், அதற்குப் போகாமலே கேள்விப்பட்டவர்களும் பலவிதமாகப் பேசிக்கொண் t-frio &@# ,
வேங்கடாசல உடையார் தமது ஒரே மகளுக்கு அவ்வளவு சிறப்பாக விவாகஞ் செய்வித்துப் பெருமகிழ்ச்சி கொண்டார். அவர்கள் சாதியிலேயே முதன்முதலாகப் பாடசாலைகளின் மேற்பார்வையாளராக அரசாங்கப் பணியில் அமர்ந்திருக்கும் சிதம்பரம் பிள்ளையல்லவா இவர் மகளுக்குக் கணவகை வாய்த் திருக்கிருர் : இப்பேர்ப்பட்ட உயர்ந்த சம்பந்தம் எளிதில் கிடைக் கக் கூடியதா ? அந்தச் சிறப்பைக் கொண்டாட எவ்வளவு செலவு செய்தால் என்ன ? இந்தப் பெருமித எண்ணத்தோடுதான் வேங்கடாசல உடையார் தம் பெண் திருமணத்துக்குத் தாராள இாகச் செலவுசெய்து பலரையும் வியப்படைய வைத்தார். அந்த ஊரில் செல்வமும் செல்வாக்கும் உடைய ஒருசிலரில் வேங் கடாசல உடையார் குறிப்பிடத்தக்கவர்; ஆதலால், இவர் வீட்டுக் - சத்துக்குப் புதுச்சேரி கவர்னர் உட்பட, அரசாங்க அதி ளும் பிரமுகர்களும் வந்திருந்ததில் ஆச்சரியமில்லை. கந்த டையார், சிதம்பரம் இருவரின் சார்பிலும் முறையே மனிதர்களும், சிநேகிதர்களும், வந்திருந்தனர்.