பக்கம்:பிள்ளைக்கலி.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む5 வரவேற்பு இசையரங்க நிகழ்ச்சிக்கென்றே மிகப் பெரியதாக போடப்பட்ட தனிப் பத்தலில் அன்று மாலை இசைவாணி சண்முகவடிவினுடைய இனிய இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மணமகனும் மணமகளும் அழகாக அலங்கரிக்க பட்ட மலர் விமானமொன்றில் உட்காரவைக்கப் பட்டிருந்தனர். அவர்களை முன்னிலையாகக் கொண்டுதான் பாடகி கச்சேரி செய்து கொண்டிருந்தாள். சிதம்பரம் மகிழ்ச்சியே உருவாக மணமகள் பக்கத்தில் அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் அடைய வேண்டிய சகல சம்பத்தையும் தான் அடைந்து விட்டதாக அவன் உள்ளம் கொண்டிருந்த பூரிப்பு அவனுடைய முகத்தில் நன்கு காணப் பட்டது. அவனுக்கு உயிர் நண்பர்களும், உத்தியோகத்தில் நெருங்கிய தொடர்புடையவர்களும், வரவேற்புக்கு வரும் போதும் போகும்போதும் அவனே அணுகித் தங்களின் மகிழ்ச்சி யையும் மரியாதையையும் தெரிவித்துக் கைகுலுக்கிவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர். கச்சேரி அருமையாக நடந்துகொண்டிருந்தது. விருந்தினர் கள் பாடகி பாடும் இன்னிசையை அனுபவித்துக் கொண்டிருந் தனர். விருந்தினர்களுக்கு மின்சார விசிறிகள் வாயிலாக வரும் காற்றுப் போதாதென்று, பணியாட்கள் வேறு பெரிய பெரிய கைவிசிறிகளைக் கொண்டு விசிறிக் காற்று வரச்செய்து கொண் டிருந்தனர். இச் சமயத்தில் விருத்தினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த வேங்கடாசல உடையார், தற்செயலாக எதையோ கவனித்துவிட்டுத் தாம் நின்றிருத்த இடத்தை விட்டுப் பதறியோடி வந்தவராய், அண்ணு, என்ன இது? என்ன வேலை செய்கிறீர்கள்......?' என்று கேட்டவாறு மண மக்கள் இருக்கும் பக்கமாக நின்று பெரிய விசிறியொன்றைப் பிடித்து விசிறிக் கொண்டிருந்த கிழவரொருவருடைய கையைப் பிடித்துக் கொண்டார். அப்போதுதான் எல்லோரும் அந்த மனிதரைப் பார்த்தனர். சிதம்பரமும் அச் சமயத்தில்தான் நோக்கினன். உடனே அவன் முகம் கறுத்து விட்டது. அவ்விடத்தில் விசிறியெடுத்து விசிறிக் கொண்டிருந்தவர் வேறு யாருமில்லை. அவனுடைய தந்தையேதான் அவர் முழங் காலுக்குமேல் வேட்டியும் தலையில் முண்டாகம் கொண்டிருந்தார். உடம்பில் சட்டை ஏ வேலையாட்களாயினும் இடத்துக்குத் தகு யுடுத்திக் கொண்டிருந்தனர்