8
அவர், வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத் தோவியமாகத் தீட்டுவதை விட்டுவிட்டு, சோயாபீன்ஸ் முதல், மெழுகுவர்த்தி வரையிலும், வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிரு.ர். ‘டபாஸா' வீரிய மாத்திரையின்மீது பாடிய ப ர ணி யும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனேயும் இவர் மீது அனுதாபம் காட்டும்படி செய்து விட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்.
வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டு பிடிக்க இயல வில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம் - எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நிடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.
பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாத மாக வர்ணிக்கிரு.ர்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்து விட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை, அவர் இந்தப் பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரளுகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோம், வேலை பார்த்தோம், வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக, எத்தனையோ வித்தைகளையெல் லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவுசெலவுத் திட்டத்தை மட்டிலும், அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால், பட்ஜெட்டில் துண்டு விழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உப மான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சம் உடம்பில் பிடிக்காமல், கடன் கேட்டுப் புறப்படுவ தற்கு முடியுமா ? குடும்பச் செலவு என்ருல், சர்க்கார் செல வாகுமா?
கவலே இருக்கப்படாது என்ற உறுதியின்பேரில்தான் நம் பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, சாகா வரம் பெற்ற கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்து விட்டு, இந்த லிப்டன் தேயிலை, காப்பி, கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால், அது ஒரு பொன் காய்க்கும் மரமாகி விடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும்