பக்கம்:பிள்ளைக்கலி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

每多 மறுபடியும் ஒர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்து கொண்டே தலைகுனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ்நீர் சுரந்து ஒழுகியது. 'மச்சான்... வவுத்திலே பூச்சி' -ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுவதும் இன்பக் கிளுகிளுப்பு ஒடிப் பரவியது. பதினேந்து வருஷமாய் வாய்க்காதது... எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து, ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போன பின்... -உடலைக் குலுக்கி, குடலை முறுக்கி ஒங்கரித்தாள்... முருகாயி. -'ஆ... அதுதான்! ஹாஹா. முருகாயி அதுதான்... ஹாஹா' ஆண்டி சிரித்தான். ‘வ் வோ ஒ!...” -குத்திட்டுத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான். 'ஹாஹாஹஹ்ஹா... அதுதான் புள்ளே, அதுதான்...” பலத்த ஒங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி. 'மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியவியே, ஐயோ!'... என்று பதறிஞள். "சும்மா, இரு புள்ளே, நம்ப வடிவேலு வைத்தியர்கிட்டே போயி எதஞச்சும் வாங்கியாறேன்.' என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக்கொண்டு கிளம்பினன் ஆண்டி. முருகாயி சிரித்தாள். "ஏ. சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கன் போருங்க.'

  • நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியவியே புள்ளே...”

"நீ ஏன் பார்க்கிறே?... அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க...'