உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台荔 ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடு காட்டின் கேட்டருகே நின்றன். - அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான். 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டுவந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில், மகிழ்ச் சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாளலயம் தவருமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழப் பதிந்தன. அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளேயே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான். - - அன்று முதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான். - 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி" - . * 冰 摩 ஆயிரக் கண்க்கான மனித உடல்கள் மாண்டபின் புதை யுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான். ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான். - தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதுரகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை. - பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினன். - - நூற்றுக் கணக்கான குழந்தைகளின் சவங்களுக்கு - குழி பறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அனைத்து ஆரத்தழுவின. - -தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்த்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழிபறித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/61&oldid=1395677" இலிருந்து மீள்விக்கப்பட்டது