64
ஊராரின் புத்திரசோகம் அவனுக்குப் புரிந்ததேயில்லை.
ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனப்போல் பாட்டுப் பாடிக்கொண்டே குழிபறிப்பான்.
அருகிலிருக்கும் அந்தப் பச்சை சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் - அதோ பக்கத்தில், மீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் - நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிருனே...
சீசீ இவனும் ஒரு மனிதன!... அதனல்தான் அவனே எல்லோரும் ஒருமாதிரி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். குழிபறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஒடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சு
வான்; கூத்தாடுவான்.
அந்த மகிழ்ச்சிக்கு, குது.ாகலத்திற்கு பாட்டிற்கு, கும்மாளத் துக்கெல்லாம் காரணம் இருளன்தான ?
இரண்டு ஆண்டுகளுக்குப்பின்... எத்தனையோ பெற்ருேளின் ஆனந்தத்துக்கு கனவுகளுக்கெல் லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில், மரணம் என்ற மாயையை மறந்து, ஜனனம் என்ற புதிரில் மட்டும் லயித்துக் கொண்டிருந்த ஆண்டியின்... ஆண்டியின்...
--சொல்ல என்ன இருக்கிறது ? இருளன் ஒருநாள் செத்துப் போனன். வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து, காலம் போன ஒருநாளில், எதிர்பாராமல் - நினேவின் நப்பாசை கூட அறுத்து போன ஒரு காலமற்ற காலத்தில், வாராமல் வந்து அவதரித்து, ஆசைகாட்டி, விளையாடிக் கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டுநாள் கொள்ளையிலே
f
வந்தது போல் போய்விட்டான்.
ஆசைகளையும் கனவுகளேயும், பாழுக்கும் பொய்மைக்கும் பறிகொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள்.
‘. . . எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப் போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பரசி வைத்து அழுதாள்.