பக்கம்:பிள்ளைக்கலி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む5 வேப்ப மரத்தடியில், கட்டித்தொங்கும் வெறும் தூளியி னருகே, முழங்கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிருன் ஆண்டி எங்கோ வெறித்த விழிகள்... என்னென்னமோ காட்சிகள். .. எல்லாம் கண்டவை . . . இனி, காண முடியாதவை... அதோ இருளன்!-- வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்... துரளியிலிருந்து உறக்கம் கலந்தபின் தலையை மட்டும் துளிக்கு வெளியே தள்ளித் தொங்கவிட்டுக் கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் "அப்பா வென்று அழைத்ததும்... செடிக்குத் தண்ணிர் ஊற்றிக் கொண்டு இருக்கும் போது அவனறியாமல் பின்னே வத்து, திடீரென்று பாய்ந்து புறம் புல்வி உடலைச் சிவிர்க்க வைத்து மகிழ்வித்ததும்... எதிரிலிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து - தனது பிஞ்சுக் கைகளே இட்டுக் குழப்பி, விரல்களுக் கிடையே சிக்கிய இரண்டொரு பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்... நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவுபகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்... -பொய்யா ?. கனவா ?. . . மருளா ?... பித்தா ?... பேதைமையா ? ஆண்டி, சித்தம் குலைவுற்றவன்போல் சிகல்யாய் உட்கார்ந் திருந்தான். இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதிமோதிச் சிவிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. அதோ குடிசையினுள்ள்ே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப்புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும், ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு: கறுத்துப் போன இதழ்களுக்கிடையே பால் மணம் மாருத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு... 5