6? அன்று அந்த நந்தவனத்துக்கு என்ன பூரிப்போ ?... மரங்களும் செடிகளும் புதுமலர்க் கொத்துகளை அந்த மயான பூமியெங்கும் சிதறிச் சொரிந்து கொண்டிருந்தன. -ஆண்டி தனது இழந்த கனவைக் கைகளில் ஏந்தி நடந் தான். . 'அந்தப் பன்னீர் மரத்தடியில் இருவனுக்குக் குழிதோண்ட வேண்டும். அந்த மரம் அவன்மீது எப்பொழுதும் தன் வாச முள்ள மலர்களைப் பொழிந்து நிற்கும்." மகனின் சடலத்தை மண்மீது கிடத்தினன். தோளில் கிடந்த மண்வெட்டியைக் கையில் ஏந்தி மரமாய் நின்ருன். அவனது கண்கள் சூனியமான வானவெளியை வெறித்து விழித்தன. வெறித்த விழிகள் சிவந்து கண்ணிர் பெருக்கின. நாசியும் உதடுகளும் தாளாத சோகத்தில் துடித்தன. நெஞ்சில் என்னவோ அடைத்தது. * மனசை இரும்பாக்கிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கினன். ஓங்கிய கைகள் நடுங்கின. கால்கள் பூமியில் நிலைக்காமல் தடுமாறின. உயர்த்திப் பிடித்திருத்த மண்வெட்டியை உதறி எறிந்து விட்டு மவனே என்று அலறியவாறு சடலத்தின் மீது விழுந்தான். 'ஒ'வென்றுக் கதறி அழுதான். அழுது சோர்ந்தான்... வெகுநேரம் தன் செல்வ மகனின்- இனிமேல் பார்க்க முடியாத மகனின்-முகத்தை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான். வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன. மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக்கொண்டு மண்வெட்டியை ஓங்கி, பூமியில் பதித்தான். 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி!" அந்தப் பாட்டு!... அவன் பாடவில்லை. ஊரார் பிணத்துக்குக் குழிபறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு... 'பாடியது யார்?...”
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/65
Appearance