6 & மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி, பூமியைக் கொத்தினன்... 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி!'... --மீண்டும் அந்தக் குரல்!...
- யாரது ?. . . .
புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண் வெட்டியால் பூமியை வெட்டினன். மீண்டும் ஒரு குரல்: 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி-அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி...' "ஐயே! அர்த்தம் புரிகிறதே..." -ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். துணைப் பிளந்து வெளிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வெளி வந்தான். கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே பாடியது சிசு! 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி-அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி... கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி...' குரல்கள் ஒன்ருகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்குமுன் புதை யுண்ட முதற் குழந்தை முதல், நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர் பெற்று, உருப்பெற்று ஒன்ருகச் சங்கமித்து, விம்மி புடைத்து விகசித்த குரலில் - மழலை மாருத மதலைக் குரலில்-பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழநின்று ஆடின. வானவெளி யெல்லாம் திசைகெட்டுத் தறிகெட்டுத் திரிந்து ஓடின. ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.