பக்கம்:பிள்ளைக்கலி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நொண்டிப் பிள்ளையார் ஜெகசிற்பியன் பக்தி சிரத்தையுடன் கை குவித்துக் கண்மூடி ஒருவிநாடி நேர ஜடத்தை முடித்துக்கொண்டு, மூன்று தோப்புக்கரணமும் போட்டுவிட்டு நிமிர்ந்த பூரீமான் வேலாயுதம், அந்தச் சின்னஞ்சிறு கோயிலில் எழுந்தருளியிருந்த நொண்டிப்பிள்ளை யாரின் திருமேனியைப் பரவசத்துடன் கண்ணசைக்காது பார்த் தார். பிறகு பித்தளைப் போணியிலிருந்து கொஞ்சம் விபூதியை எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். இதுவரை பிளாட்பாரத்தைப் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த ஆண்டியப்பன் அவர் போவதைப் பார்த்ததும் கையிலிருந்த மண் குடத்தைக் கீழே வைத்துவிட்டு அவசரமாக அவரை நோக்கிச் சென்ருன். 'நமஸ்காரமுங்க. ' தெரு ஒரமாகக் கழற்றி வைத்திருந்த செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு சைக்கிளைத் தள்ளி அதில் ஏறப்போன வேலாயுதம் சட்டென்று நின்று பின்னல் திரும்பிப் பார்த்தார். ஆண்டியப்பன் அவர் அருகில் வந்து மரியாதையாக நின்றன். வேலாயுதம் அவனை அன்புடன் பார்த்துப் புன்னகை செய்தபடி, "என்ன, ஆண்டியப்பா! நான் சொன்னேனே, அது விஷயமாக முயற்சி பண்ணியைா ?' என்று கேட்டார். 'அதைத்தான் சொல்ல வந்தேனுங்க. நானுாறு பேருங்க கிட்டே கையெழுத்து வாங்கியிருக்கேன். அது போதுங்களா ?” என்று பணிவுடன் சொன்ன ஆண்டியப்பன் தன்னுடைய மடியை அவிழ்த்து, இரண்டாக மடித்து வைத்திருந்த ஒர் எண்பது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான். நானூறு கையெழுத்தா? இன்னும் ஒரு நூறு பேரிடம் வாங்கியிருக்கலாமே!...... உ.ம்... பரவாயில்லே. இதை வைச்சுக் கிட்டே முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்றபடி அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினர் வேலாயுதம், பென்சிலாலும் பேணுவாலுமாகப் போடப்பட்ட பல்வேறு விதமான கையெழுத்துகள் அவற்றில் நிறைந் திருந்தன. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம்,