71
ஹிந்தி முதலான பல மொழிகளிலும் இடப்பட்டிருந்த அந்தக் கையெழுத்துக் குப்பைகளைக் காண மிகவும் விநோதமாக இருந்தது. பிரும்ம சிருஷ்டியிலுள்ள பல விசித்திரங்களை நினைவூட்டி, பெரிய தத்துவ சிந்தனைகளில் அவை மனத்தை இழுத்துச்சென்றன.
'இப்போ இந்தக் கையெழுத்துகளை என்ன பண்ணனு முங்க ?’ என்று மிகவும் அக்கறையாகக் கேட்டான் ஆண்டி யப்பன்.
வேலாயுதம் தொண்டையை மெல்லக் கனைத்துக் கொண்டு சொன்னர்: 'பிரமாதமா பண்ண வேண்டியது ஒண்னு மில்லை. இந்தக் கையெழுத்துக்களோடுகூட ஒரு கடிதாசி எழுதிக் கார்ப்பொரேஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டியது. 'இந்தத் தெருவிலே, இந்த அரச மரத்தடியிலே, இந்த நொண்டிப் பிள்ளையார் கோயில் ஏற்பட்டு மூணு வருஷமாகுது. இங்கே தினமும் பிள்ளையாரைச் சேவிச்சுக்கிட்டுப் போக நிறைய ஜனங்கள் வர்ருங்க. அதனுலே, கோயிலுக்கு எதிரிலே ஒரு டூம்-லேட் போட்டுத் தரும்படியா கேட்டுக்கிறேன். அப்ப டீன்னு கடிதாசி எழுதணும்-அவ்வளவுதான்.'
‘'இப்படி எழுதின கார்ப்பொரேஷன் டூம் விளக்குப் போட்டுக் கொடுத்துடுமுங்களா?' என்று ஆவலுடன் கேட்டான் ஆண்டியப்பன்.
'போட்டுக் கொடுக்கணும். நீ பார்த்ததில்லையா ? மசூதி, மாதா கோயில், நம்ம கோயில் எல்லாத்துக்குமே இந்த மாதிரி விளக்குப் போட்டுத் தர்றது வழக்கம்தான். கேட்கும்போதே ரெண்டு விளக்கா கேளு; அப்போத்தான் ஒண்ணுவதுகிடைக்கும்.’’
'அப்படீன்ன சரிங்க. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நீங்களே ஒரு கடிதாசி எழுதிக் கொடுத்துடுங்க!” -
'கடிதாசியிலே நீதான் கையெழுத்துப் போடணும்.’’
'அதை நான் போட்டுக்கிறேனுங்க. கைநாட்டு வைச்சா போருதுங்களா ?”
'போதும், போதும்!" நோட்டுப் புத்தகத்தை சைக்கிள் nட்டின்மேல் வைத்துக் கொண்டு அதன் முதல் பக்கத்தில் மளமளவென எழுதி முடித்தார் வேலாயுதம், பிறகு தம் பேளுவைத் திருப்பி ஆண்டியப்பனின் இடக்கைப் பெருவிரலில் கொஞ்சம் மசியைப் பூசிஞர். அவன்