பக்கம்:பிள்ளைக்கலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


உண்டு. இப்பொழுது அது நெடுந்துார இலட்சியமாகவே மாறி விட்டது. முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிகை ஆபீசில் வேலை. ஆனல், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில்தான் எழுதிக்கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி; அதனுல்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும்; தமது துார இலட்சி யத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.சி.ஏ (pவஹிம்சை நிவாரணச் சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையையும் சகித்துக்கொண்டிருப்பார்கள். சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. 'ஏட்டி, என்ன! நீயோ உன் லட்சணமோ!' என்று ஆரம்பித்தார் முருகதாசர். ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிருன். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி, ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிருள். ரிக்ஷாக்கார னுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்! 'ஏட்டி!' என்ருர் முருகதாசர் மறுபடியும். 'இல்லையப்பா! நீ இனிமெ என்னை அலமுன்னு கூப்டு வேன்னியே!’ என்று சொல்லிக்கொண்டே, வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தாள். 'தீப்பெட்டி எங்கட்டி?' என்ருர் முருகதாசர். 'கடைக்காரன் குடுக்க மாட்டேங்கருன், அப்பா!' 'குடுக்காதெ போளு நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?’’ 'அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட் டாமே சொல்லிப் பார்த்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து விடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னம் பயலே காணும்.........' என்று நீட்டிக்கொண்டே போனன் ரிக்ஷாக்காரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/7&oldid=1395623" இலிருந்து மீள்விக்கப்பட்டது