பக்கம்:பிள்ளைக்கலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


எப்படியோ தட்டுத் தடுமாறி வந்து இந்த அரச மரத்தடியில் படுத்துவிட்டான். அன்றைய பகல்பொழுது முழுவதும் அவனுக்கு நல்ல தூக்கம். மாலை மங்கும் வேளையில் அவன் மெள்ளக் கண் விழித்து எழுந்து உட்கார்ந்தான். தன்னைச் சுற்றி ஏழெட்டுக் காலணுக்களும், இரண்டு மூன்று கட்டை அரையளுக்களும் இறைந்து கிடப்பதைக் கண்டு அவனுக்கு ஒரே வியப்பாகி விட்டது. ஆவலுடன் அந்தக் காசுகளைப் பொறுக்கிச் சேர்த் தான். மொத்தம் நாலே காலணு இருந்தது. இந்தக் காசுகள் அங்கு எப்படி வந்தன ?... நீண்ட நேர யோசனைக்குப்பின் அவனுக்கு விஷயம் ஒருவாறு விளங்கியது. அன்றெல்லாம் அவன் பசிக் களைப்புடன் பிணம்போல் படுத்துத் துங்கிக் கொண்டிருந்தான் அல்லவா ? அந்தத் தெரு வழியே நடந்து போனவர்கள் அவனைப் பார்த்து, 'யாரோ அநாதை, செத்துக் கிடக்கிருன்' என்று எண்ணியிருப்பார்கள். உடனே அவர்களுடைய இளகிய மனம் உருகிக் கரைந்து விட்டிருக்கும்; தர்ம சிந்தனை வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து விட்டிருக்கும். "ஐயோ, பாவம்' என்றபடி சற்றுத் தள்ளிப் போய் நின்று ஒரு காலணுவோ, அரையளுவோ எடுத்து அந்தப் "பிணத்தின் மேல் விட்டெறிந்துவிட்டுச் சென்றிருப்பார்கள். எதற்கு அந்தக் காலணு தர்மம் ? அந்த அநாதைப் பிணத்தை யாராவது எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்வதற்காக! தன்னைப் புதைப்பதற்காக அளிக்கப்பட்ட அந்த நாலே காலணுவை எடுத்துக் கொண்டு ஹோட்டலே நோக்கி நடையைக் கட்டினன் ஆண்டியப்பன். வயிற்றுப்பசி ஒருவாறு தீர்ந்தது. திரும்பி வந்து அந்த அரச மரத்தடியிலேயே படுத்துக்கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. ஆண்டியப்பன் எழுந்து உட்கார்ந்தான். இன்றையப் பொழுதைக் கழிப்பது எப்படி என்ற கவலை அவனைக் கப்பிக்கொண்டது. நேற்றிரவு சாப் பிட்டதை அவன் வயிறு மறந்துவிட்டது. எங்காவது போய்ப் பிச்சை எடுக்கலாமா என்று ஒரு கணம் எண்ணினன். அப்படி எண்ணவே அவனுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. ஆளுல் அதைத்தவிர இப்போது வேறு வழியில்லை. இன்றுபோல் அன்று இந்தத் தெரு அத்தனை கலகலப்பாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐந்தாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/72&oldid=1395689" இலிருந்து மீள்விக்கப்பட்டது