பக்கம்:பிள்ளைக்கலி.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


வீடுகளே இருந்தன. ஒரு கடை கண்ணி கிடையாது. ஜன நட மாட்டமோ, வாகனதிகளின் போக்குவரத்தோ மிகவும் குறைவு. மேற்குக் கிழக்காக அமைந்த இந்தத் தெருவின் மேலண்டையில் ஒர் அலுமினியப் பாத்திர உற்பத்திக் கம்பெனி இருந்தது. அதிலிருந்து எப்போதும் 'லொட்டு லொட் டென்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் கம்பெனியை ஒட்டினுற் போல் வடக்குத் தெற்காக ரயில்வே லேன் சென்றது. அதனல் அவ்வப்போது மின்சார வண்டிகள் ஒடும் இரைச்சலும் கேட்டுக்கொண்டிருக்கும். இதற்கு நேர்மாருக, தெருவின் கீழண்டைத் திசையில் எப்போதும் அமைதி நிலவியிருக்கும். மயானத்துக்குச் செல்லும் பாதைபோல் அது வெறிச்சோடிக் கிடக்கும். அதோ தெரிகிறதே, பச்சைநிற 'டிஸ்டம்பர் அடித்த ஒரு பங்களா, அது அப்போது அஸ்திவாரத்தோடு நின்றிருந்தது. லாரிகளிலும் மாட்டு வண்டிகளிலுமாகச் செங்கற்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. எங்காவது போய்ப் பிச்சையாவது கேட்டுப் பார்க்கலாம் என்ற முடிவுடன் அரசமரத்தடியை விட்டு எழுத்து நின்ருன் ஆண்டி யப்பன். அச்சமயம் அந்தத் தெரு வழியே ஒரு வண்டிக்காரன் செங்கற்களை ஏற்றிக்கொண்டு வந்தான். ஆண்டியப்பன் அவனேப் பார்த்து, 'அண்ணே, ரொம்பப் பசியா இருக்கு எதஞச்சும் இருந்தா கொடுத்துட்டுப் போயேன் ?' என்ருன் பரிதாபமாக. வண்டிக்காரன் வண்டியை நிறுத்திவிட்டு அவனை ஏற இறங்கப் பார்த்தான். 'என்னய்யா இது, காலங்கார்த்தாலே வழி மறிக்கிறே ? நானும் உன்னைப் போலத்தான். நீ வாயைத் திறந்து கேட்டுட்டே நான் அப்படிக் கேட்கவே. சரி, சரி; என்கிட்டே ஒண்னும் கிடையாது. இந்தா, இந்த மூணு கல்லே எடுத்துக்கிட்டு போய் எங்களுச்சும் கொடு. முக்காலணு கிடைக்கும் என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டே மூன்று செங்கற்களை எடுத்துக் கீழேபோட்டுவிட்டு வண்டியை ஒட்டிச் சென்ருன் அந்தத் தர்ம சீலன். இதல்ை வண்டிக்காரனுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. சூளையிலிருந்து கற்களை ஏற்றும்போதே குளே முதலாளிக்குத் தெரியாமல் இருபது முப்பது கற்களை அதிகப்படியாக எடுத்துப் போட்டுக் கொள்வது வழக்கம். கல்லே இறக்கும் இடத்தில் அந்த அதிகப்படியான கற்களைக் கணக்குக் காட்டி, அதற்குண்டான பணத்தை வண்டிக் காரர்கள் பெற்றுக்கொள்வார்கள். இந்தக் காலத்தில் மேல்வரும் படிக்கு வழிசெய்து கொள்ளாமல் யாரால்தான் பிழைக்க முடிகிறது ?