பக்கம்:பிள்ளைக்கலி.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


ஆண்டியப்பன் அந்த மு.அ. செங்கற்களேயும் தூக்கிக் கொண்டு ஒரு புதிய வீடு கட்டும் இடத்தை நோக்கி நடந்தான். அவன் அதிர்ஷ்டம், அங்கே அவை விலை போக வில்லை. கற்களைச் சுமந்துகொண்டு அரச மரத்தடிக்குத் திரும்பி வந்து சேர்த்தான். சூரியன் கரகரவென மேலேறி நெருப்பை வாரிக் கொட்ட ஆரம்பித்தது. நல்ல வெயில். ஆனல் அரச மரத்தடி நிழலில் குளுகுளுவென்று காற்று வீசியது. பசி வயிற்றைக் கிள்ளிலுைம் அந்த அருமையான நிழலைவிட்டு நகர மனமின்றிச் செங்கற்களை அடுக்கித் தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு நிம்மதியாகப் படுத்துவிட்டான் ஆண்டியப்பன். அவனுடைய மனமும் பார்வையும் சூன்யத்தை நோக்கித் துழாவிக் கொண்டிருந்தன. 'அப்பனே, முருகா!... என்ன வெயில் என்ன வெயில்!” என்று அலுத்தபடி அந்த அரசமரத்தடியில் வேர்க்க விறுவிறுக்க வந்து தின்முன் ஒரு கிழவன். அவன் தலையில் ஒரு பெரிய கூடை இருந்தது. அதை மிகுந்த சிரமத்துடன் கீழே இறக்கி வைத்து விட்டு, 'சும்மாட்டுத் துணியை உதறிப் போட்டு உட்கார்ந்தான். அவன் ஒரு பொம்மை வியாபாரி; சூளைப் பொம்மைக் கலைஞன். கூடை நிறைய வைக்கோலால் பொதியப் பெற்ற அழகழகான பொம்மைகள் இருந்தன. பாலகிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், சிவபெருமான், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, காந்திஜி, நேருஜி, நேதாஜி, ராஜாஜி, புத்தர், மான், மயில், கிளி, கரடி, குருஷேவ் மற்றும் பலவிதமான பொம்மைகள் அழகழகான வண்ணப் பூச்சுடன் கண்ணப் பறிப்பனவாய் இருந்தன. எல்லாம் மண் பொம்மைகள்தாம். ஆனல் அவை அனைத்திலும் ஓர் உயர்ந்த ஜீவ களை ததும்பிக் கொண்டிருந்தது. பழைமையும் புதுமையும் கலந்த ஓர் அற்புதக் கலைப் படைப் பாகவே அன்வ் விளங்கின. நிழலின் குளிர்ச்சியால் சோர்வு நீங்கப்பெற்ற கிழவன், கூடையிலிருந்த பொம்மைகளை யெல்லாம் கீழே இறக்கி வைத்துவிட்டு, வைக்கோலே நன்ருகப் பரப்பி, மீண்டும் அவற்றை எடுத்துக் கூடையில் அடுக்க ஆரம்பித்தான். ஆண்டியப்பன். அந்தப் பொம்மை ார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிப் கு அத்தனை பசிக் களைப்பு.