பக்கம்:பிள்ளைக்கலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 9 இதற்குள் இந்த நொண்டிப் பிள்ளையார் தமக்கென்று சில பத்தர்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு விட்டாரே ? என்ன அவசரம்: ஆண்டியப்பன் அந்த மூன்றே முக்காலணுவை எடுத்துக் கொண்டு கடைத்தெருவை நோக்கி ஓடினன். திரும்பி வரும் போது அவனிடம் ஒர் அகல் விளக்கும் கொஞ்சம் ஆமணக்கு எண்ணெயும் இருந்தன. நொண்டிப் பிள்ளையார் அருகில் விளக்கேற்றி வைத்து விட்டு அவர் பாதத்துக்கு நேரே தலைவைத்துப் படுத்தான். அன்று அவன் எவ்விதப் பயமுமின்றி நிம்மதியாகத் தூங்கினன். நாள்கள் பல நடந்தன. அரச மரத்தடியில் குடியேறிய நொண்டிப் பிள்ளையாருக்கு யோகம் அடித்து விட்டது. நாளுக்கு நாள் அவருடைய பக்தர்களின் எண்ணிக்கை மிகுதியாயிற்று. தம்மை நாடிவரும் பக்தர்களுக்குக் குறைந்த காணிக்கையுடன் நிறைய வரங்களை வாரி வழங்கினர். அவருடைய புகழ் நகரெங்கும் பரவியது. காலையிலும் மாலையிலும் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாயிற்று. சாக்காட்டுச் சாலைபோல் வெறிச் சோடிக் கிடந்த அந்தத் தெரு இப்போது புத்துயிர் பெற்று விளங்கியது. தெருவின் இருபுறமும் மளமளவென வீடுகள் எழும்பின. ஹோட்டல், ஜவுளிக் கடை, பலசரக்குக் கடை, லாண்டரி எல்லாம் ஏற்பட்டன. இதுவரை வேறு பாதையில் போய்க்கொண்டிருந்த பஸ் இப்போது இந்தத் தெருவழியே திருப்பி விடப்பட்டிருந்தது. அரச மரத்துக்கு நேரே ஒரு பஸ் ஸ்டாப்பும் போடப்பட்டது. நொண்டிப் பிள்ளையார் கோயிலுக்கு வலப்பக்கம் கோவிந்தன் நாயர் வந்து, பங்க் கடை திறந்தான். இடப்பக்கம் அபரஞ்சி பூக்கடை போட்டாள். இவையெல்லாம் நொண்டிப் பிள்ளையாரால் ஏற்பட்ட மகிமை! ஆண்டியப்பனுக்கு ஒரே உற்சாகம். ஏனென்ருல், அவன் தான் அந்த நொண்டிப் பிள்ளையார் கோயிலின் பூசாரி. இன்னும் கொஞ்சம் கெளரவமாக, தர்மகர்த்தா என்றும் சொல்லலாம்! இரவு எட்டுமணிமுதல் காலை ஐந்துமணிவரை வாட்ச் மேன் வேலை பார்க்கப் போய் விடுவான். திரும்பி வந்ததும் பிள்ளையார் கோயில் பூசாரியாக மாறிவிடுவான். ; : . . . . மூன்று. மாதங்களுக்குப்பின் * பிள்ள்ையார் கோயில் மண் உண்டியலில் ஒரு பதினத்து ருபாய் சேர்ந்தது. அந்தப் பணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/77&oldid=1395695" இலிருந்து மீள்விக்கப்பட்டது