8 I ஆனல், அந்தப் பெரிய ஆசைக்கு ஒரு பெருஞ்சோதனையாக, பூக்காரி அபரஞ்சி குறுக்கிட்டாள். விஷயம் ஒன்றும் பிர மாத மில்லை; நொண்டிப் பிள்ளையார் மீதே முழு மனத்தையும் வைத்திருந்த ஆண்டியப்பனே அவள் தன்னைப் பற்றியும் கொஞ்ச நேரம் சிந்திக்க வைத்துவிட்டாள்! அபரஞ்சி அழகியல்ல; ஆனல் கவர்ச்சி மிக்கவள். வேடிக்கையாகப் பேசுவதில் வல்லவள். வியாபாரத்தில் சாமர்த்தியசாலி. அவள் கன்னியா, விதவையா என்பது யாருக்கும் தெரியாத ஒரு புதிர். கடந்த ஒரு மாத காலமாக அவள் ஆண்டியப்பனிடம் நெருங்கிப் பழகத் தலைப்பட்டிருந்தாள். அவனுடைய நலனில் அக்கறை கொண்டவள்போல் நடந்து கொண்டாள். காலேயில் ஆப்பமும் காப்பியும், மத்தியானத்தில் சோறும் கறியும் கொண்டுவந்து கொடுப்பாள். இதற்கெல்லாம் அவள் அவனிடம் காசு பணம் எதுவும் வாங்கிக் கொள்வ தில்லை. ஆண்டியப்பனும் அவளிடம் மிகுந்த அன்புடன் பழகி வந்தான். இந்தப் புதிய நாடகத்தை பங்க் கடை நாயர் கவனிக்கத் தவறவில்லை. அவனுக்கு அபரஞ்சிமீது ஆரம்ப நாள் முதலே ஒரு கண் உண்டு. ஆனல் அவள் அவனைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. கூன் வளைந்த ஆண்டியப்பனை அவள் பார்க்கும் பார்வையே ஒரு தினுசுதான். அந்தப் பார்வைக்கு நாயர் வேறு பொருள் கற்பித்திருந்தான். ஒருவேளை அவன் அப்படி நினைத்தது சரிதானே, என்னவோ! 'என்ன, பூசாரி ஐயா ஒரேயடியா யோசனையிலே ஆழ்ந்துட் டாரு?" என்று கேட்டுக்கொண்டே நாணிக் கோனியபடி சற்றுத் தொலைவில் வந்து அமர்ந்தாள் அபரஞ்சி. பழைய செங்கற்களின்மேல் தல வைத்துப் படுத்தவாறு பழைய சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த ஆண்டியப்பன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்த்தான். 'ஓ... அடரஞ்சியா ?' என்று புன்னகை யுடன் இழுத்த அவன் பின்னல் திரும்பிப் பார்த்துவிட்டு, பூக் கடையெல்லாம் ஏறக்கட்டியாச்சுப் போலிருக்கே ? புறப்பட்டுட் டயா ?’ என்று கேட்டான். "ஆமாம்; மணி ஏழாகப் போகுதே!' என்று நொடித் தாள் அபரஞ்சி. - - 'ஏழாயிடுச்சா ? அப்போ தான் டுட்டிக்குக் கிளம்ப வேண் டியதுதான்' என்றபடி எழுந்தான் ஆண்டியப்பன். 6.
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/79
Appearance