I 0 'அப்பா, அவன் பங்கஜத்தை மாத்திரம் கூட்டிக்கிட்டே போரானே' என்ருள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்-ரிஜிஸ் திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும்; மோட்டாரிலும் போகும். அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக் குத்தான் புரியுமா? 'அலமு! ராத்திரிலெ கொழந்தைகள் ரிக்ஷாவிலெ போகக் படாதுட்டி! எறங்கி வா!' என்று குழந்தையைத் துரக்கிக் கொண்டு, வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்ருர் முருகதாசர். பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே, கடைக்காரன், சாமி! இந்த மாதிரி யிருந்தாக் கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கைத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!” என்ருன். நானும் பிழைக்க வந்தவன்தான். எல்லாரும் சாகவா வருகிரு.ர்கள்! மின்னெ பின்னெதான் இருக்கும். நான் என்ன கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறேன ?’’ 'போங்க சாமி, அது ஒண்ணுதான் பாக்கி: ரூ. 2-5-4ஆச்சு; எப்ப வரும் ?” 'தீப்பெட்டியைக் குடு சொல்றேன்!' 'பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும் ?’’ 'எப்பவா ? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்! நாளே இல்லாவிட்டால் திங்கக்கிழமை." "திங்கக்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!” என்ருன். 'சரி பார்க்கிறேன்!” என்று திரும்பினர் தாசர். 'பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!" ஒரு கவலை தீர்ந்தது........ அதாவது திங்கட்கிழமை வரை. பாதி வழியில் போகையில், அப்பா!' என்றது குழந்தை. அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னே யறியாமல் கொஞ்சம் கடினமாக, 'என்ன?' என்ருர். 'நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்ல மாட்டேன், போ!'
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/8
Appearance