பக்கம்:பிள்ளைக்கலி.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 பிள்ளையார் கோயில் எதிரில் 'டும்-லேட் எரியப்போகிறது. அந்த அழகான காட்சியைக் காண அவன் இப்போதே ஆவலுடன் காத் திருக்கலாஞன். ஆப்பம் காப்பியோடு அங்கு வந்தாள் அபரஞ்சி. ஆனல் ஆண்டியப்பன் அவற்றை ஏனே கையால்கூடத் தொடவில்லை. 'ஏன் ? சாப்பிடறதுதானே ? : வேண்டாம், அபரஞ்சி! நான் நாஸ்தா பண்ணிப் பிட்டேன்." அவள் அவனை அதிசயமாக உற்றுப் பார்த்தாள். பிறகு தணிந்த குரலில், 'ஆமாம்... நான் கேட்டேனே அது என்ன ஆச்சு ?’ என்ருள். ஆண்டியப்பன் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உறுதியாகச் சொன்னன்: 'அபரஞ்சி, நான் அதுபத்தி யோசிச்சுப் பார்த்தேன். எனக்கு அது சரியா தோணலே. பிள்ளையார் பணத்தை எடுத்து யாருக்கும் நான் கொடுக்கமாட் டேன். என்னை இதோட விட்டுவிடு!” அபரஞ்சியின் முகம் சுண்டிவிட்டது. அவள் அங்கிருந்து ‘விர்ரேன்று எழுந்து போய்விட்டாள்.' அன்று மாலை ஐந்து மணியிருக்கும். நொண்டிப் பிள்ளையான்ரத் தரிசிக்க ஆண்களும் பெண் களும் சாரிசாரியாக வந்துகொண்டிருந்தனர். கோயில் வாச லாக விளங்கிய பிளாட்பாரத்தைப் பெருக்கித் தண்ணிர் தெளித்துக் கொண்டிருந்தான் ஆண்டியப்பன். 'நீர்தானே இந்தக் கோயில் பூசாரி ஆண்டியப்பன் என்பவர் ? என்று கேட்டுக்கொண்டே சைக்கிளை விட்டுக் கிழே இறங்கினர் ஹாட்டும் சூட்டுமாய் இருந்த ஒருவர். "ஆமாங்க. நீங்க யாரு ? - பல்யமாக வினவினன் ஆண்டியப்பன். 'இப்படி வாரும். உம்மிடம் சில விஷயங்கள் பேச வேண்டி இருவரும் சற்றுத் தள்ளிப்போய் நின்றுகொண்டனர். வந்தவர் சொன்னுர்: