உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


'அது முடியாதுங்க. அதை நான் ஒப்புக்கொள்ள மாட் டேனுங்க!” 'முடியாதா ? ஏன் முடியாது ?’’ 'இது என் சொந்தக் கோயிலுங்க.' அதிகாரி கலகலவெனச் சிரித்தார். எப்படியப்பா உனக்கு இது சொந்தம் ? இந்தக் கோயில் இருக்கும் இடம் யாருடையது ? இது சர்க்காருடைய நிலம் என்பது உனக்குத் தெரியாதா?’’ 'நிலம் சர்க்காருடையதாயிருக்கலாம். ஆனால் இந்தக் கோயிலைக் கட்டினவன் நான்!” 'உன் கைப்பணத்தைப் போட்டா கட்டிய்ை ? ஜனங்கள் கொடுத்த காணிக்கைப் பணம்தானே?" ஆண்டியப்பனின் உடல் கிடுகிடுவென நடுங்கியது. அவனல் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 'சரி; விஷயம் இவ்வளவுதான். நான் உண்டியலை சீல்" பண்ணிவிட்டுப் போகிறேன். நாளைக்கு இன்னொருவர் வந்து உனக்கு மற்ற எல்லா விவரங்களையும் பற்றிச் சொல்வார்' என்று கூறிக்கொண்டே கோயிலே நோக்கி நடந்தார் அதிகாரி. திகைத்து நின்ற ஆண்டியப்பன் திடீரென ஏதோ ஆவேசம் வந்தவன்போல் அந்த அதிகாரியின் முன்னே பாய்ந்து சென்ருன். சார், கொஞ்சம் அப்படியே நில்லுங்க! இது உங்க சர்க்கா ருடைய நிலம்தான். இது உங்க ஜனங்கள் கொடுத்த பணத் தாலே கட்டின கோயில்தான். ஆனல், இந்த நொண்டிப்பிள்ளை யார் எனக்குச் சொந்தமானவர்; எனக்கு மட்டுமே சொந்த மானவர். அவரை நான் எங்கேயும் எடுத்துப்போக எனக்கு உரிமை இருக்கு. அதை நீங்க தடுக்க முடியாது!’ என்று உரத்த குரலில் அலறிக்கொண்டே ஓடிப்போய் அந்த நொண்டிப் பிள்ளையாரை வெடுக்கெனத் தூக்கித் தன் மார்பில் அணைத்துக்கொண்டு, அதே வேகத்தில் ஒடி அந்தப் பழைய மூன்று செங்கற்களையும் எடுத்துத் தோளில் சுமந்தவாறு அங்கிருந்து எங்கோ வேகமாக நடக்கலானுன் ஆண்டியப்பன். அறநிலையப் பாதுகாப்பு அதிகாரி அப்படியே அதிர்ச்சி யடைந்து நின்றுவிட்டார். புதிதாக நிர்மாணித்திருந்த டூம்விளக்குப் பளிச்சென்று எரியத் துவங்கியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/84&oldid=1395703" இலிருந்து மீள்விக்கப்பட்டது