உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. யாருக்கு யார் துணை ர. சு. நல்லபெருமாள் சுலோசன முதலியார் பாலத்துப் பக்கம் வந்ததும் சிவராம பிள்ளை திரும்பிப் பார்த்தார். தம்மை யாராவது தொடர்ந்து வருகிரு.ர்களா என்று பார்த்தார். அப்படி வரவேண்டும் என்னும் சபலம்தான் திரும்பிப் பார்க்க வைத்தது. இனி அவரைத் தொடர்ந்து யார் வரப்போகிரு.ர்கள் ? நேற்றுவரை தினமும் ஆபீஸ் முடிந்ததும் கூடவரும் சுப்புசாமிகூட இன்று நின்று விட்டாரே! சிவராம பிள்ளை ஒரு பெருமூச்சு விட்டார். மூக்கு நுனியில் நழுவியிருந்த கண்ணுடியை உயர்த்தி விட்டுக் கொண்டு மீண்டும் சற்றுத் துரத்தில் பார்வையைச் செலுத்தினர். ஆர்ச் வரைக்கும் அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவ்வளவு தூரம் வரையில் வந்தார்களே, அதுவே பெரிதுதான். முப்பதாண்டுகள் தாலுகா ஆபீஸில் குமாஸ்தாவாக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த கடனுக்காக அன்று அவருக்குப் பிரிவுபசாரக் கூட்டம்கூட நடத்தினர்களே! இதை விடத்தான் சிவராம பிள்ளை என்ன எதிர்பார்க்க முடியும் ? ஆச்சு. வருஷம் முப்பது ஓடிவிட்டது. இன்று அவர் 'ரிடையர் ஆகிவிட் டார். ஒரு சிறு கூட்டமும் கூட்டி, தேநீரும்கொடுத்து, அவரைச் சக ஊழியர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். மரியாதைக்கு 'ஆர்ச் வரைக்கும் கூடவே வந்து வழியனுப்பியாகி விட்டது. இன்னும் கூடத் துணைக்கு வரமுடியுமா ? கையில் தொங்கிய மாலை கனத்தது. மறு கையில் மாற்றிக் கொண்டார். பரவாயில்லை. கனத்த ரோஜாப்பூ மாலையாகத் தான் போட்டிருக்கிருர்கள். முப்பது ஆண்டு உழைப்புக்குக் கடைசியில் மாலை இந்தக் கனமாவது இருக்க வேண்டாமா? பாலத்தின் பக்கத்தில் வந்தவருக்கு மேலே நடக்க மனமில்லை. அங்கேயே நின்ருர். சீக்கிரமாக வீட்டுக்குப்போய் என்ன செய்து விடப்போகிருர், நாளேமுதல் விடுமுறைதான். விடுமுறை என்ன, இனி எந்நாளும் நிரந்தர விடுதலைதான். முப்பது வருஷங்களுக்கு முன்னுல் இதே பாலத்தைக் தான் முதன்முதலில் ஆபீசுக்கு வேலைக்குப் போளுர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/85&oldid=1395704" இலிருந்து மீள்விக்கப்பட்டது