99 உண்டு. ஏழெட்டுக் குழந்தைகள் உண்டு. ஆனல் சிவராம பிள்ளைக்கு அந்தச் சங்கடங்களெல்லாம் இல்லை. பையன்கள் இரண்டு பேர் உண்டு. இருவரும் இன்ஜினியர் களாக ஒருவன் மதுரையிலும், ஒருவன் சென்னேயிலும் இருக்கிருர் கள். தலைக்கு ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குகிரு.ர்கள். சிவராம பிள்ளைக்குப் பொறுப்பு ஏதுமில்லை. இரண்டு பையன் களையும் ஆளாக்கிவிட்ட பிறகு, அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. கொக்கிர குளத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிடித்த அதே வாடகை வீட்டில்தான் இருக்கிருர், வீடு அப்படியேதான் இருக்கிறது. ஆனல் வாடகை மட்டும் ஐந்து ருபாயிலிருந்து இருபது ரூபாய்க்குத் தாவிவிட்டது. இப்போது அந்த வீட்டை நோக்கித்தான் கால்கள் அவரை இழுத்துச் சென்றன. ஆனல் பாலத்தின் முடிவில் வந்து மேலே நகராமல் நின்றுவிட்டன. வீட்டில் அவருக்காகக் காத்திருக்கும் ஜீவனும் இப்போது அவரைத் தேடி இங்கேயே வந்துவிட்டது. வீட்டுக்கு என்ன அவசரம் ? பிள்ளையார் கோயில் படி வழியாக ஆற்றுக்குள் இறங்கி வழக்கமாக உட்காரும் மணலில் போய் உட்கார்ந்து கொண்டார். வருஷக் கணக்காக உட்காரும் இடம்தான் அது. அந்த இடத்தில் அமர்ந்து கொண்டுதான் முப்பது வருஷத்திய கனவுகளையும் தினமும் கண்டார். இன்றும் அங்கேயே போய் உட்கார்ந்து கொண்டார். பூமாலையை எங்கே வைப்பது? மணலில் போட் டால் மாலேயெல்லாம் மணலாகிவிடும், கோட்டைக் கழற்றி மணலில் விரித்து, அதன் மீது மாலையை வைத்தார். பிறகு இடுப்பில் சுற்றியிருந்த துண்டை எடுத்து மணலில் விரித்துப் படுத்தார். நாய் அவரை இரண்டு மூன்று முறை சுற்றிவந்தது. பிறகு அவருடைய கால்மாட்டில் மணலில் குழியைப் பறித்து அதில் படுத்துக் கொண்டது. கண்ணெதிரே உயரே நட்சத்திரங்கள் எப்போதும் போல் மின்னின. எந்த மாற்றமும் இல்லை. ஆனல் இன்று என்ன இப்படி ஆகிவிட்டார் ? ஒரே நாளில் உடல் தளர்ந்து விடுமா ? மல்லாந்து படுத்தவர், மூட்டை மடக்கிக் கால்மேல் ல் போட்டுக் கொண்டார். சற்றுத் தூரத்தில் இன்னும் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். ஓர் ஒரத்தில் நாலைந்து பேர்கள் அரசியலைப்பற்றித் தர்க்கித்துக் கூச்சல் போட்டுக் கொண்டிருந் தரர்கள். ஒன்றிலும் சிவராம பிள்ளையின் மனம் செல்லவில்லை.
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/88
Appearance