9 I திடீரென்று அநாதையாகித் தெருவில் நின்று தவிப்பதைப் போன்ற உணர்வு அழுத்திக் கொண்டிருந்தது. ரிடையராயாச்சு. வேலே முடிந்து விட்டது. முப்பது வருஷத்துப் பழக்கம் அன்ருேடு முடிந்து விட்டது. சூனியம் சூழ்ந்து விட்டதா ? பஞ்சப்படியெல்லாம் சேர்த்து இருநூறு ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்தது. இனி ஏதோ பிச்சைக் காசு மாதிரி ஐம்பதோ அறுபதோ கிடைக்கும். பையன்கள் தலைக்கு ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கிருர்கள்; கார்போட்டு அனுபவிக்கிருர்கள். ஆனல், இவருக்கு என்ன அதைப்பற்றி : கல்யாணி இருந்தால் இப்படி அநாதைபோல் நினைக்க வேண்டியிருக்குமா ? சிவராம பிள்ளைக்கு இப்படி ஆயாசம் தட்டியிருக்குமா ? அவளுடைய நச்சரிப்புத் தாங்காமல் இராமேசுவரம் வரைக்கும் அவளோடு துணைக்குப் போனரே, இந்த இரண்டு பையன்களையும் பெற்று எடுக்க. நாய் திடீரென்று எழுந்து நின்றுகொண்டு தொண்டை கிழியக் குரைத்தது. சிவராம பிள்ளை படுத்தவாறே தலையைத் திரும்பிப் பார்த்தார். பக்கத்தில் யாரோ வந்து கொண்டிருந் தார். வந்தவர் நாய் குரைப்பதைக் கண்டு தயங்கி நின்ருர். 'சீ, சும்மா இரு கழுதை!' என்று அதட்டினர் சிவராம பிள்ளை. நாய் தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று எண்ணி மீண்டும் மணலில் படுத்துக் கொண்டது. "யாரு...? சிவராம பிள்ளையா?" என்று கேட்டார் வந்தவர். இருட்டில் சிவராம பிள்ளைக்கு அடையாளம் தெரியவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டார் பக்கத்தில் நின்றவர் கீழே உட்கார்ந்தார். "ஓ... சாஸ்திரிகளா ? என்ருர் சிவராம பிள்ளை. 'என்ன? ரோஜாப்பூ மாலையெல்லாம் ?' என்று சாஸ்திரி கேட்டார். . . 'இன்னிக்கு ரிடையராகிவிட்டேன். தெரியாதா 2. . . * * என்ருர் சிவராம பிள்ளை. அவர் குரலில் தொனித்தது மகிழ்ச்சியா அல்லது விரக்தியா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதுக்குள்ளேயா ?” என்ருர் சாஸ்திரி. ஏதோ காலக் கணக்கில் தப்புப்போட்டு விட்டவர் மாதிரி. "ஆச்சே! வருஷம் முப்பதாச்சே!” என்ருர் பிள்ளை.
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/89
Appearance