If I 'கோவம் என்னட்டி, கோவம்! சும்மா சொல்லு!’ 'அதோ பார், பல்லு மாமா!' முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை, வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை அவைசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந் தன. அதனால் அலமு. அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது!. "எங்கட்டி!' 'அதோ பார், வீட்டு நடேலே, என்னை எறக்கி விடப்பா!' என்று, அவரது கையிலிருந்து வழுவி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது. 'மெதுவா! மெதுவா!' என்ருர் பிள்ளை! குழந்தையா கேட்கும் ? "மாட்டேன்' என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கியதோ என்னமோ, அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதrணம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளையவர்கள் ஒடிப்போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனல் இவர் பதட்டத்திற்கு ஏற்ப, அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை. ‘'தோளுக்கு மேலே தொண்ணுறு. தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!’ என்று பாடிக்கொண்டு குழந்தை எழுந்தது. ‘'என்ன சார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?’’ என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார். ‘'என்ன சார், செய்யட்டும்! என்ன சொன்னலும் கேட்கிற தில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளியே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னுேட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரளுேடே தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் சார், உள்ளே! ஒன் மினிட் விளக்கை ஏத்துகிறேன்.' குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், 'பல்லு மாமா வந்துவிட்டார்!’ என்று மெதுவாக உச்சஸ்தாயியில் விளம்பரம் செய்துகொண்டு ஓடிவிட்டாள்.
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/9
Appearance