பக்கம்:பிள்ளைக்கலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


ஆச்சு, முப்பது வருஷங்களை ஒரு கெட்ட பெயர் இல்லாமல் ஒட்டிவிட்டேன். இனியும் எப்படியும் ஒட்டி விடுவேன். இந்தப் பயல்கள் வீட்டில் போய்ப் பிச்சை எடுப்பேன ? அப்படித்தானே சொன்னன் சின்னவன். அன்று இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, மொட்டை மாடியில் இருந்தபோது, சின்னவன் வந்து என்ன சொன்னன்... அப்பா! உங்களுக்கு இந்த ஊர்தான் புடிச்சுப்போச்சு. இதை விட்டு நீங்க எங்கேயும் வரமாட்டீங்க. நீங்க ரிடையரானதும் அதிகமாக வெளியே சுற்ருமல் ஊரோடேயே இருங்கள். நான் மாதம் ஐம்பது ரூபாய் அனுப்பி விடுகிறேன். அண்ணனும் அவன் பங்குக்கு அனுப்புவான். நிம்மதியாக இருங்கள்...' எப்படி இருக்கிறது பேச்சு ? சின்னப்பயல், எனக்குப் பிச்சையா போடுகிருன் ? நான் கேட்டேன ? இவன் பேச்சுக்கு அர்த்தம் என்ன ? 'அப்பா நீங்கள் ரிடையரானதும் புறப்பட்டு நான் இருக்கும் இடத்துக்கு வந்து விடாதீர்கள். அது சரிப்படாது. என்னைப் பெற்ற கடனுக்கு உங்களுக்கு மாதம் ஐம்பது ரூபாய் அனுப்பி விடுகிறேன். காணுதென்ருல், மீதியைப் பெரியவன் கொடுப் Liffsār.’’ இப்படித்தானே அர்த்தம்...? அண்ணனும் அவன் பங்குக்கு அனுப்புவாளும். இதென்ன பாகப் பிரிவினையா? அப்பனிடம் செலுத்த வேண்டிய கடமை யையும் பாகம் பிரித்துத்தான் செய்யவேண்டுமா ? டேய், டேய் நான் அவ்வளவு மானம் கெட்டவனடா, உங்கிட்டே வந்து பணம்பெற...? பெரியவன் பரவாயில்லை. கொஞ்சம் ஆசாபாசம் உள்ளவன்; பாவம், பெண்டாட்டி ஒரு முறை முறைத்தால் அடங்கிவிடுவான். போகும்போது அவனுடைய மனம் திறந்து கொண்டது. 'அப்பா, இங்கேயே இந்த ஊரிலேயே முடங்கியிருக்கீங்களே, ஒரு மாசம் லீவு போட்டுவிட்டுப் பட்டணத்துக்கு வாருங்களேன்' என்ருன். மனம் திறந்து சொன்ன சொல்தான். ஆனால், அவன் சொல்லும்போது ஒருமுறை மனைவியைப் பார்த்துவிட்டு நடுங்கிப்போனனே. பிறகு பேச்சை மாற்றிவிட்டான். பாவம் அவனைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. பாசம் நெஞ்சோடு இருந்தால் போதுமடா நீ எங்கிருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/92&oldid=1395711" இலிருந்து மீள்விக்கப்பட்டது