பக்கம்:பிள்ளைக்கலி.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


"என்ன இது ? பைத்தியக்காரி! இத்தனை வர்ணங்களிலும் பொம்மைகளிலும் உனக்கு இந்தக் கருப்புக் குருவிதான பிடித்தது?’ என்று கேட்டாள் சுந்தரியின் தாயார், சுந்தரியைப் பார்த்து. "எனக்கு இந்தக் கருப்புக் குருவிதான் வேணும்ப்பா!' என்று அப்பாவிடம் கொஞ்சிள்ை சுந்தரி. சரி! சரி! எடுத்துக்கோ!' என்ருர் தகப்பனர். சுந்தரியின் தாயார் கேட்டாள். 'இதென்ன இது கரிச் சான் பொம்மை" என்று தகப்பருைக்குக் கோபம் வந்தது. ஆமாமா இந்தக் குருவியின் அருமை உனக்கென்ன தெரியும் சுந்தரிதான் கெட்டிக்காரி!” என்று சொல்லியவாறு, பொம்மைக்காரனிடம் அதிகமாகப் பேரம் பேசாமல் பணத்தைக் கொடுத்து அவனை வெளியே அனுப்பிவைத்தார் தகப்பனர். சுந்தரியின் தகப்பளுருக்குக் கருங்குருவி என்ருல் எப் பொழுதுமே ஒரு தனியான மோகம் அவருடைய சிறு வயதில் 'பெருமாள்புரம் என்ற அவருடைய கிராமத்தில் வைஷ்ணவ பக்தர்கள் திவ்யப்பிரபந்தம் படிக்கும்போது அதில் ஆனைச் சாத்தன்' என்று குறிக்கப்படும் பறவை இந்தக் கருங்குருவிதான் என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிருர் வைகறைப் பொழுதில் விடிவதற்கு முன்பு பெருமாள்புரம் கிராமத்தில் கருங்குருவிகள் ஆனந்தமாகப் பாடுவதையும் கேட்டுக்கேட்டு அனுபவித்திருக்கிருர் சுந்தரியின் தகப்பனர். பிற்காலத்தில் அவர் தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பித்த பிறகு இந்தக் கருங் குருவி மீண்டும் அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டது. காரணம், மழைக் காலத்தைப்பற்றி அவர் படித்த ஓர் அருமையான பாடல்:

கன்னல்எனும் கருங்குருவி

ககனமழைக்(கு) ஆற்ருமல் மின்னல்எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்!" பெருமாள்புரம் கிராமத்தில் தூக்கணங் குருவி போன்ற பல குருவிகள் மரங்களிலே கூடுகட்டி வாழ்க்கை நடத்துவதைப் பார்த்திருக்கிருர் சுந்தரியின் தகப்பனர். கடுமையான மழைக் காலத்தில் இரவு நேரங்களில் தாய்க்குருவி தன்னுடைய கூண்டு மாளிகையிலே மின்சார விளக்குப் போடும் விந்தையைக் கண்டு வியந்திருக்கிருர் அவர். சிறுசிறு களிமண் உருண்டைகளைக்