99
கொண்டுவந்து கூண்டுக்குள்ளே வைத்து அந்த மண் உருண்டை களிலே மின்மினிப் புழுவை எடுத்துவந்து பதித்து விளக்கேற்றி விடும் தாய்க்குருவி! இந்த மின்மினி வெளிச்சத்தில் குளிரான கார்காலத்திலே குஞ்சுகளைக் கண்துயிலச் செய்யும். அந்த அதிசயத்தை இப்பொழுது கவிதையிலே கண்டு சொக்கினர்.
'கன்னல்எனும் கருங்குருவி ககனமழைக்(கு) ஆற்ருமல் மின்னல்எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்!' என்ன அழகான கற்பனே! கார் காலத்திலே, மழையைத் தாங்க முடியாமல் இரவு என்னும் கருங்குருவி, உலகம் என்ற தன் னுடைய கூட்டிலே, மின்னல் என்ற மின்மினிப் பூச்சியை எடுத்துவந்து விளக்கு ஏற்றுகிறது. 'கன்னல்எனும் கருங்குருவி ககனமழைக்(கு) ஆற்ருமல் மின்னல்எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்!' இந்தக் கருங்குருவிப் பொம்மையைப் பார்த்ததும் சுந்தரியின் தகப்பஞர் அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தார். அதற்குப் பதவுரை, பொழிப்புரை சொல்ல ஆரம்பித்து, மனைவியைப் பதில் பேசவிடாமல் அடுக்களைக்குள்ளேயே அனுப்பிவிட்டார் அவர்! சுந்தரிக்கோ இந்தப் பாடல் எல்லாம் ஒன்றும் தேவை யில்லை. பொம்மையின் நீண்ட வாலும், அது இரண்டு கூருகப் பிளந்து வானத்திலே எவ்விப் பறக்க முயன்று நிற்கும் அந்த நிலையும் அவளுடைய குழந்தை மனத்தைக் கவர்ந்தன. "அப்பா, இந்தக் குருவியைப் பூனைப் பொம்மையின் பக்கத் திலே வைக்காதேப்பா!' என்ருள் சுந்தரி. 'அட அசடே! பூனை என்ன செய்யும் இந்தக் குருவியை!” என்று கேட்டார் தந்தை. 'பிடித்துக் கொன்று போட்டு விடும்ப்பா!' என்ருள் சுந்தரி அச்சத்தோடு! தகப்பனர் தம்முடைய மேஜையின்மேல் இருந்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துச் சுந்தரிக்குப் படிக்க ஆரம்பித்தார். அது கலைக்களஞ்சியம் என்ற நூலின் மூன்றுவது தொகுதி. 'கரிக்குருவி' என்ற வார்த்தைக்குக் கீழே எழுதியிருந்த குறிப்பைப் படிக்க ஆரம்பித்தார்: