பக்கம்:பிள்ளைக்கலி.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 0 'கரிக்குருவிக்குத் துணிவு அதகம். தன்னிலும் பெரிதான காக்கையோ, பருந்தோ, தன் கூட்டின் அருகே வந்தால் அவை களைத் துரத்தி, வானத்திலிருந்து அம்புபோல் அவைகளின் முதுகின்மேல் பாய்ந்து கொத்தி நெடுந்துரம் ஒட்டிவிடும். கரிக்குருவி கூடு கட்டிய உயர்மரத்தின் கீழ்க்கிளையில் மணிப்புரு முதலிய பறவைகள் கூடு கட்டிக்கொண்டு, கரிக்குருவியின் காவலில் வாழும். மனிதர் வெளியே புறப்பட்டுச் செல்லுகையில் கரிக்குருவியை எதிரில் கண்டு, அது வலமிருந்து இடம்சென்ருல் நல்ல சகுனம் என்ற ஒரு பழைய நம்பிக்கை உண்டு.' இவ்வாறு எழுதியிருந்தது கலைக் களஞ்சியத்திலே! இதைப் படித்துக் காட்டித் தமது குழந்தைக்கு ஊக்கம் கொடுத்தார் தகப்பனர். ஆனலும், பூனைப் பொம்மையின் பக்கத்தில் அந்தக் குருவிப் பொம்மை இருப்பது சுந்தரிக்கு எப்படியோ இருந்தது. இரவு படுக்கப் போகுமுன் குருவியை எடுத்து இரண்டாவது தட்டிலே நகர்த்தி வைத்துவிட்டுத்தான் தூங்கிளுள் சுந்தரி. ஆனலும், என்ன வியப்பு, சுந்தரி ஒரு கனவு கண்டாள். சுந்தரியின் கொலுவிலேயிருந்த பொம்மைகளுக்குத் திடீ ரென்று உயிர் வந்து விட்டது! உயிர்வந்தால் இப்படியா வரும்: சுந்தரிக்குக் கையும் காலும் பதறின! மேல் தட்டிலேயிருந்த புலி ஒரே சீறல் சீறிற்று, நாலாவது தட்டிலேயிருந்த புள்ளிமானப் பார்த்து! அதோ சிங்கம் யானையைப் பார்த்துக் கர்ஜனை செய்கிறது. சிறுத்தை பசுவின் மேல் பாய்கிறது பாவம் கன்றுக்குட்டி அப்படியே துள்ளி ஓடுகிறது! இதோ குரங்கு வாழைப்பழத்தைப் பார்த்துத் தாவுகிறது: எலியைக் கவ்வு வதற்குச் சாடிய பூனேயை நாய் குறுக்கே விழுந்து வழிமறிக்கிறது: உடனே அந்தப் பொல்லாத பூனே மறுபக்கம் திரும்பித் தன் னுடைய பார்வையைக் கருங்குருவியின்மேல் செலுத்துகிறது! கருங்குருவி "ஐயோ! என் கருங்குருவி, பூனக்குப் பயந்து பறந்து ஒடப் பார்க்கிறதே! இதோ பறந்தே போய்விடுமே! பிறகு அகப் படவே அகப்படாதே' என்று கதறலாம் போலத் தோன்றியது சுந்தரிக்கு ஆளுல், ஏனே. குரல் அடைத்துப்போய் விட்டது. கனவிலே இப்படித்தான் குரல் அடைத்துக்கொள்ளும் குழந்தே" என்று சுந்தரியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தஞ்சாவூர்ப் பொம்மை தன்னுடைய பெருவயிற்றுடன் அப்படியும் இப்படியும் ஆடியது. -