உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 || சுந்தரிக்குக் கண் கலங்கியது. ஆனல் திடீரென்று இதென்ன! சுந்தரியின் கலங்கிய கண்களுக்கு முன்னுல் பொம்மைகளுக்கு மத்தியிலே புல்லாங்குழலைப் பிடித்து நின்ற கிருஷ்ணன் பொம் மையின் விரல்கள் ஆட ஆரம்பித்தன. அடுத்த விடிை காற்றினிலே மிதந்தது வேணுகானம். சுந்தரி அப்படியே மெய்சிலிர்த்துப் போளுள். சுந்தரி என்ன, அந்தப் பொம்மை யுலகத்து ஜீவ ராசிகள் அத்தனையுமே அப்படித்தான். 'கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இரங்கிச் செவி ஆட்டகில் லாவே' என்றும், 'ஊதுகின்ற குழலோசை வழியே மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்தபுல்லும் கடைவாய்வழி சோர எழுதுசித் திரங்கள் போலநின் றனவே" என்றும், ஆழ்வார் ஒரே பரவசத்தோடு வர்ணித்த தெய்வீக கீதம் அல்லவா அது. அந்தக் கீதம் எத்தனை பெரிய மாயத் தைச் செய்துவிட்டது இப்பொழுது அந்தக் கொலு அரங்கிலே! மானின்மேல் பாய்ந்த புலி அப்படியே இசையிலே நின்றுவிட்டது. பசுவின்மேல் சீறிய சிறுத்தை அப்படியே வேய்ங்குழலின் ஒலியிலே, கட்டுண்டு ஸ்தம்பித்துவிட்டது. யானையை நோக்கி ஓடிய சிங்கம், பூனையைப் பார்த்துச் சாடிய நாய், பூனேயிடமிருந்து தப்பிப் பறக்க முயன்ற கருங்குருவி எல்லாம் அப்படி அப்படியே மோகன கீதத்தில் சொக்கி நின்றுவிட்டன! 'உலகெலாம் உளவாக்கி நிலைபெறுத்தல்' என்று கம்பர் பாடினரே, அப்படி ஒவ்வொன்றும் அதனதன் இடத்திலே நிலைபெறும்படி செய்துவிட்ட அந்த மாய மோகனக் குழலிசை தொடர்ந்து இன்னும் சற்று நேரம் நீடித்தது: அதற்குள் என்ன ஆயிற்று! கீதத்தில் சொக்கி சொக்கி மீண்டும் அத்தனையும் கல்லாகச் சமைந்து பொம்மைகளாக மாறி, மண்கட்டி களாக ஆடாமல் அசையாமல் அப்படி அப்படியே கொலுவிலே அமர்ந்து விட்டன - அத்தனை ஜீவராசிகளும்-இல்லை. அத்தனை பொம்மைகளும்! தன்னிடமிருந்து பறந்து சென்றுவிட முயன்ற கருங்குருவி மறுபடியும் மண்பொம்மையாக மாறிக் கொலுவிலே அமர்ந்து விட்ட அந்த ஆனந்தத்தில் சுந்தரி கருங்குருவி என்று கூவிக் கொண்டேதுாக்கத்திலிருந்து ஒரு துள்ளுத்துள்ளி எழுந்திருத்தாள். அந்த ஓசையைக் கேட்டு அப்பாவும் விழித்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/99&oldid=1395718" இலிருந்து மீள்விக்கப்பட்டது