இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சதுர்த்தி விரதம் 4 இப்படித்தான் சதுர்த்தி விரதம் அன்று முதல்அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்று கூறுகின்றன புராணங்கள். அதிலும், இந்த விரதம் பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய விரதம் என்றும் சொல்கிறது. காரணம் : இந்த உலகத்தில் ஆண்களை விடப் பெண்கள்தானே, காரணமே இல்லாமல் வீண் அபவாதத்திற்கு உள்ளாகிறார்கள். ஆதலால் அவர்கள் மேல் ஏற்படும் வீண் அபவாதங்கள் நீங்கவும், அவர்கள் மிகவும் விரும்பும் பிள்ளைப்பேறு முதலிய எண்ணங்கள் சித்தி பெறவும், சித்தி விநாயகரை அவர் விரும்பிய சதுர்த்தி அன்று விரதம் அனுஷ்டித்து வணங்குதல் வேண்டும். வருஷம் முழுவதும் இருபத்திநான்கு சதுர்த்தியிலும் விரதம் அனுஷ்டிப்பதோடு ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரத பூர்த்தி செய்து விநாயகரைத் தொழுதால் பெறுதற்கரிய பேறுகளையெல்லாம் பெறலாம் என்பதுதான் மக்கள் நம்பிக்கை.