பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார் பட்டியில் சதுர்த்தி 5 ராமநாதபுரம் ஜில்லாவில் குன்றக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டியில் பிள்ளையாருக்கு உகந்த சதுர்த்தி விரதம் எல்லோராலும், சிறப்பாக பெண்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருஷம் முழுவதும் - ஆம் இருபத்திநான்கு சதுர்த்தி திதியிலும், விரதம் அனுஷ்டித்தவர்கள் எல்லாம், வருவடிக்கடைசியில், ஆவணி மாதம் சுக்லபகூடி சதுர்த்தியன்று விரத பூர்த்தி செய்கிறார்கள். அன்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் சந்நிதியில் - வருஷம் முழுவதும் விரதம். அனுஷ்டித்த பெண்கள் ஒன்று கூடுகிறார்கள். விரத பூர்த்தி செய்ய வந்திருக்கும் பெண்கள் எத்தனையோ, அத்தனை வெள்ளிக் குடங்கள். நானூறு ஐந்நூறு பேர் வந்தாலும், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒன்று என்று வெள்ளிக் குடங்கள் வைத்து, ஒவ்வொரு குடத்தினுள்ளும் ஒவ்வொரு வெள்ளிப் பிள்ளையாரைப் போட்டு, குடத்தில் தண்ணிர் நிரப்பி பூசனை புரிகிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குடம் எடுத்து, அந்தக் குடத்தில் உள்ள தண்ணிரால் அபிஷேகம் செய்து கொள்கிறார்கள். நனைந்த உடலொடும், உடையோடும் பிள்ளையார் சந்நிதியிலே விழுந்து வண்ங்கி, எழுந்து நின்று தீப ஆராதனையைக் கண்டு களிக்கிறார்கள். அன்று கோயிலில் கொடுக்கும் பிரசாதமாகிய மோதக நைவேத்தியத்தை மட்டுமே அருந்துகிறார்கள். இப்படி விரதம் அனுஷ்டித்து, விரத பூர்த்தி செய்கின்ற பெண்கள் எல்லோரும் அவரவர்கள் பிரார்த்தனை செய்துகொண்ட எல்லா நலங்களையும் பெறுகிறார்கள். பெண்கள் மட்டும் என்ன - ஆண்களுமே இந்த சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்பது திண்ணந்தானே. ஆனால் அபிஷேகம் எல்லாம் பெண்களுக்குத்தான் ; ஆண்களுக்கு இல்லை. பெண்ணின் பிரார்த்தனை நிறைவேறுகின்றதென்றால் அந்தப் பிரார்த்தனையில் நாயகனுக்கு வேண்டிய பிரார்த்தனையும் சேர்ந்துகொள்ளும் தானே. ஆதலால், தனியே ஆண்மகன் வேறு பிரார்த்தனை பண்ணிக்கொள்ளவேண்டுமா, அல்லது தான் அபிஷேகம் பண்ணிக்கொள்ள வேண்டுமா என்ன? ஐந்து கரந்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே -திருமூலர்