உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவதாரம் 7


முடிவும் அறிவும், அதாவது சித்தியும் புத்தியும் விநாயகருக்குத் திருவடிகள் - இல்லை - திருவடிவருடும் தர்மபத்தினிகள் ஆகின்றார்கள். தாழ் செவி சர்வ சக்தியையும், ஏக தந்தம் பரஞானத்தையும், ஒடிந்த தந்தம் அபயத்தையும், லம்போதரம் பொறுமையையும் அறிவிக்கும் அடையாளங்களாக அமைகின்றன. எல்லாவ்ற்றினுக்கும் மேலாக உலகம் தோன்றுவதற்கு மூலகாரணமாம் 'ஓம்’ என்னும் பிரணவ உருவத்திலேயே தெய்வத்திரு உரு அமைகிறது. அதன் மூலம் அந்தத் திரு உருவே, அறிவுக்கு அறிவாகவும், எங்கும் வியாபித்து நிற்கும் பரம் பொருளாகவும், யாவராலும் அறியப்படாத நிலையிலேயும் எல்லோராலும் வணங்கப்படும் இயல்புடையதாகவும், இறைவனுடைய தன்மைகள் எல்லாம் நிறைந்து நின்று மக்களுக்கு அருள் செய்யும் திருக்கோலமாகவும் அமைந்துவிடுகிறது.


பாசத்தளை அறுத்துப் பாவக்கடல் கலக்கி நேசத்தளைப்பட்டு நிற்குமே-மாசற்ற
காரார்வரை ஈன்ற கன்னிப்பிடிஅளித்த
ஓரானை வந்தென் உளத்து

- குமரகுருபரர்