பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநாயகரது திரு உருவங்கள் 温0 இப்படியெல்லாம் கலைஞனது சிந்தனையில் உருப்பெற்று, மக்களால் எல்லாம் வணங்கப்பெறும் இக்கடவுளின் திருவுருவத்தைச் சித்திரத்திலே எழுதினார்கள், கல்லிலே செதுக்கினார்கள், செம்பிலே வடித்தார்கள் தமிழர்கள். பாலகணபதி, மகாகணபதி, விரகணபதி, சக்தி கணபதி, வாதாபி கணபதி, ஹேரம்ப கணபதி, பிரசன்ன கணபதி, உச்சிஷ்ட கணபதி என்றெல்லாம் எண்ணற்ற பெயர்களால் அழைத்தார்கள். இம்மட்டோ, ஆதிவிநாயகர், சோம விநாயகர், மாணிக்க விநாயகர், வரசித்தி விநாயகர், என்றும் பெயரிட்டு, இதைவிட இன்னும் அருமையாக ஆண்ட பிள்ளையார், வேதப் பிள்ளையார், உச்சிப் பிள்ளையார், கள்ளவாரணப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார் என்றெல்லாம் செல்லப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் பாராட்டப் பெற்ற விநாயகரை, கோயில் கர்ப்பக் கிரஹத்துக்குள் மட்டும் பூட்டி வைத்து விடவில்லை தமிழர்கள். ஊர். ஒனராக, தெருத்தெருவாக, சந்திசந்தியாக, பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள். பெரியவர்கள் மாத்திரம் அல்ல, சின்னஞ்சிறுவர்கள் அறிஞர்கள், பாமரர்கள், ஜாதியால் உயர்ந்தவர்கள், தாழ்ந்த இனத்தவர்கள் எல்லோரும் கண்டு தொழ, நெருங்கிப் பழகத் தகுந்த முறையில் எல்லாம் அமைத்திருக்கிறார்கள். தமிழ்க் கலைஞனது ஆசை இத்துடன் நின்று விடவில்லை. பிள்ளையாரை உட்கார வைத்துப் பார்த்திருக்கிறான் ; நிற்க வைத்தும் நோக்கியிருக்கிறான் நடம் ஆட வைத்தும் களித்திருக்கிறான் நடனம் ஆடும் விநாயகரை நர்த்தன விநாயகர் என்று நாமகரணமும் செய்திருக்கிறான். இந்த உலகமே ஒரு சுழற்சியின் வசப்பட்டது தான். அதனால் உலகில் உள்ள எல்லா உயிர்களும் ஆடத்தானே செய்ய வேண்டும். உலகம் ஆட, உயிர்கள் ஆட மேரு பர்வதம் போன்ற பெரிய பொருள்களும் ஆட, விசாலமான ஆகாசத்திலே அண்டங்களும் ஆடுகின்றன, இறைவன் ஆடும் போது, அப்போது உள்ளத்தோடு உள்ளமாய் கலந்து நிற்கும் விநாயகரும் ஆடுகிறார் என்கிறார் அதிரா அடிகள.