உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் i:3 பல்லவ மன்னன் மகேந்திர வர்மனிடம் சேனாதிபதியாக இருந்தவர். பரஞ்சோதி. மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மனது சிறந்த நண்பர் அவர் மகேந்திரவர்மனுக்குப் பின் நரசிம்ம வர்ம பல்லவனிடமும் சேனாதிபதியாக இருந்திருக்கிறார். சளுக்கிய மன்னன் புலிகேசிமேல் நரசிம்மவர்மன் தொடுத்த போரில் முன்னின்று சேைைனயை நடத்தியிருக்கிறார். சளுக்கிய மன்னன் தலைநகரமான வாதாபி மீது படையெடுத்து, அந்தப் போரில் வெற்றி கண்டு அந்நகரைத் திக்கிரையாக்கியிருக்கிறார். வாதாபி நகரம் பற்றி எரிகிற போது, அந்த நகரில் அகப்பட்டதை எல்லாம் சுருட்டிக் கொள்ளத் தன் படைவீரர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான்.நரசிம்மவர்மன் எல்லாப் படை வீரர்களும் பொன்னையும் பொருளையும் கொள்ளை கொண்டு போகிற போது, பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி மட்டும், பொன்னிலும் பொருளிலும் மோகம் கொள்ளாமல், அந்த நகரத்தின் கோட்டை வாயிலில் இருந்த கணபதி. விக்கிரஹத்தை மட்டும் தான் எடுத்துச் செல்ல மன்னனிடம் அனுமதி கேட்டிருக்கிறார். மன்னனோ அனுமதி கொடுக்கத் தயங்கவில்லை. அவ்வளவு தான். வாதாபிக் கோட்டையிலுள்ள கணபதி பெயர்த்து எடுக்கப்பட்டார். நாடு திரும்பிய வெற்றி வீரர்களோடு வீரராக, ஏன்-வீரர்கள் தலைவராகவே தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டு விட்டார். பரஞ்சோதி. நேரே இந்த விநாயகரைத் தன் சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடிக்கே கொண்டு வந்து விட்டார். அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டையும் செய்து வைத்துவிட்டார். வாதாபி கணபதி தமிழ்நாட்டிற்குள் வந்து நிலை பெற்றது இப்படித்தான். - திருச்செங்காட்டங்குடியில் வாதாபி கணபதியை பரஞ்சோதியார் ஆம் பின்னர் தன்னைச் சிறுத்தொண்டர் - என்றே கூறிக் கொண்டவா பிரதிஷ்டை செய்த திருநாளன்று பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருக்கிறான். பரஞ்சோதியாருடைய கைங்கர்யத்தைப் பாராட்டியிருக்கிறான். ஆனால் பரஞ்சோதியாருக்கு மட்டும் ஒரு சிறு கவலை. தன்னைப் போல் கணபதியின் பேரில் காதல் கொள்பவர்கள் யாராவது, தான் வாதாபியிலிருந்து கணபதியைப் பெயர்த்து எடுத்து வந்தது போலவே செங்காட்டங் குடியிலிருந்தும் பெயர்த்து எடுத்துச் செல்லலாம் அல்லவா என்பதுதான் அது. பரஞ்சோதியாருடைய கவலையை உணர்த்திருக்கிறான் நரசிம்மவர்மன். அப்படி நடக்காது, கவலையே வேண்டியதில்லை என்று அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறான்.