பிள்ளையார்புட்டிப்பிள்ளையார் 14 என்றாலும், இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் ஊன்றி நின்றிருக்கிறது. தென்னாடு வந்து பல்லவச் சக்கரவர்த்தி தன் தந்தை மகேந்திர வர்மன், திருச்சி சித்தன்ன வாயில் முதலிய இடங்களில் கட்டிய குடைவரைக் கோயில்களையும், தீட்டிய சித்திரங்களையும் காண விரைந்து ஒரு சுற்றுப்பிரயாணத்தைக் துவங்கி இருக்கிறான். அந்தப் பிரயாணத்தில்தான், இன்றைய காரைக்குடியை அடுத்துள்ள குன்றக் குடியிலிருந்து மேற்கு நோக்கி நடந்திருக்கிறான். அப்படி நடந்த வழியில் ஒரு சிறிய குன்றைக் கண்டிருக்கிறான். இந்தச் சிறிய குன்றில் ஒரு கணபதியை செதுக்கி வைத்து விட்டால், அசைக்க முடியாதவராக அமர்ந்து விடமாட்டாரா அவர் என்றும் எண்ணியிருக்கிறான். அவ்வளவுதான் அவன் எண்ணத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்கள், சிற்பிகள். மலையைக் குடைவது என்பதுதான் அவர்களுக்கு எளிதான காரியம் ஆயிற்றே. குடைவரைக் கோயில் ஒன்று உருவாகிவிட்டது. அங்கு தேசிவிநாயகப் பிள்ளையார் அசையாத பிள்ளையாக, அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்து விட்டார். திருவீங்கைக்குடி மகாதேவரும் உருவாகிவிட்டார். இருவருக்கும் இடையில் சிற்பிகள் நரசிம்மவர்மப் பல்லவனது திருவுருவையுமே செதுக்கி நிறுத்தி விட்டார்கள். அன்று முதல் இங்கு பிள்ளையார் ஆதிக்கம் செலுத்த முற்பட்டு விட்டார். ஈக்காட்டுர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தச் சிற்றுரின் பெயர் அன்று முதல் பிள்ளையார்பட்டி என்று நிலைத்து விட்டது. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் உருவான கதை இப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் குடைவரைக் கோயிலில், பிள்ளையார் திருஉரு, அசைக்கமுடியாக திரு உருவம் அமைக்கின்ற வாய்ப்பு ஏற்படாதல்லவா? பிள்ளையாருக்கு இப்படி அசைக்க முடியாத அற்புதமான திருஉரு என்று அமைந்ததோ அன்றே இந்தப் பிள்ளையாரும் தமிழ் மக்களது உள்ளத்திலே அசைக்க முடியாதபடிநிரந்தரமான இடம் ஒன்றைப் பெற்று விட்டார். ஒத் வினை அகலும், ஓங்கு புகழ் பெருகும்; காதற் பொருள் அனைத்தும் கைகூடும் . என்ற நம்பிக்கையும் தமிழ் மக்கள் உள்ளத்தில் உண்டாகி விட்டது. அசைக்க முடியாத பிள்ளையார், அசையாத நம்பிக்கையை ஊட்டி இருப்பது வியப்பில்லை தானே
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/28
Appearance