பிள்ளையாள்பட்டிப் பிள்ளையார் i5 பிள்ளையார்பட்டி ஒரு சிற்றுர் ராமநாதபுரம் ஜில்லாவில், காரைக்குடியிலிருந்து திருப்புத்துர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு மேற்கே இரண்டு மைல் துரத்தில் இருக்கிறது. ஊருக்கு மத்தியிலே கோயிலும் குளமும், குளக்கரையைச் சுற்றி அகன்ற வீதி, நரசிம்மவர்மன் காலத்தில் உருவான குடைவரைக் கோயிலை மூலக் கோயிலாகக் கொண்டு பின்னர் இந்தக் கோயில் விரிந்து வளர்ந்திருக்கிறது. இப்படி விரிந்த கோயில்தான் இன்று மண்டபம், 吓段 கோபுரம் முதலியவைகளுடன் பெருங்கோயிலாக இருக்கின்றது. இந்தக் கோயிலில் கோயில் கொண்டிருப்பவர் மருதங்குடி நாயனார். கோயிலை விரிவாகவும் அழகாகவும் கட்டிமுடித்தவர்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார். கோயிலைக் கட்டிக் கோயிலுக்குமுன் ஒரு நல்ல.குளத்தையும் வெட்டி இவற்றைச் சுற்றி நல்ல நல்ல விடுதிகளையும் அமைத்துத் தக்க முறையில் பாதுகாத்து வருகிறார்கள் பதினாறு காரியக்காரர்கள். இக்காரியக்காரர்கள்தான் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார் என்ற கோத்திரத்தவர். இவர்களே, கோவில் பூசை, படித்தரம் முதலியவைகள் சிறப்பாக நடைபெறக் கோயில் வருமானம் போதாமல் இருப்பதால் தங்கள் சமுதாய நிதியிலிருந்து கொடுத்து உதவுகிறார்கள். இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் இரண்டு பிரசித்தம். ஒன்று மார்கழியில் திருவாதிரைத் திருநாள். மற்றொன்று விநாயக சதுர்த்தி, திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேதராக நடராஜர் விதி உலா வருவார். அன்று சிவகாம சுந்தரியின் ஊடலைத் தீர்க்க, நடராஜர் எழுதிக் கொடுக்கும் பிடிபாடு மிக்க அழகானது. அதாவது தனக்கு எவ்வளவு சொத்திருக்கிறது என்பதை எல்லாம் அழகாகக் எடுத்துக் கூறிச் சிவகாமியின் ஊடல் தீர்க்க விரைவார். சிவகாமியின் ஊடல் தீர்கிறதோ இல்லையோ, கோயிலின் நிலபுல விவரம் முழுவதும், ஆண்டு தோறும் அறுவடைக்காலமான மார்கழியில் ஊரார் எல்லாம் அறியப் படிக்கப் பெறுவது என்பது வரவேற்கத்தக்கஒன்றுதானே. இந்தக் கோயிலில் பெருந் திருவிழா விநாயக சதுர்த்தியே. பிள்ளையார் ஆதிக்கம் உள்ள் இந்தக் கோயிலில் சதுர்த்தி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது ஆச்சரியமில்லைதான். விழா மற்றக் கோயில்களில் எல்லாம் நடைபெறுவதுபோல, பத்து நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடக்கும் விழாத்தான் இக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்போடு நடத்தப் பெறுகிறது. - விழாவைப் பற்றிச் சொல்லுமுன் விரதத்தைப் பற்றி, அவ்விரதம் ஏற்பட்ட விதத்தைப் பற்றி ஒரு வார்த்தை.
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/32
Appearance