பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் 13 ஏது என்று சொல்லும் கலையன்பர்களுமே அங்கு சென்று கான வேண்டியவை பல உண்டு. முதலில் பல்லவ மன்னன் -ಕ್ತಿಲ್ಲ! குடைவரைக் கோயிலை, மாமல்லபுரம், மகேந்திரவாடி, மாமண்டுர், திருச்சிராப்பள்ளி, திருமெய்யம் முதலிய ஊர்களில் உள்ளகுடைவரைக் கோயில்களோடு ஒப்பிட்டு, பல்லவர் காலத்தில் சிற்பக் கலை எப்படி எல்லாம் வளர்ந்தோங்கியிருக்கிறது என்று கண்டறிய இயலும் அதற்குமேல் இந்தக் குடைவரைக் கோயிலில் உள்ள Sir೧GL7ಕ್ಕೆ ஏபடி மற்றத் தமிழ் நாட்டுப் பிள்ளையார் உருவங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதும் தெரியும். - இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து, அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித்தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர் இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும், பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்திலே படிய விடாமல் அர்த்த பத்ம ஆசனத்திலேயே கால்களின் மீது படிந்திருக்கச் செய்து கொள்ளுகிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கி இடக்கரத்தை இடையில் பொருத்தி பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுக்கிறார். ஆதி நாளிலே உருவானவர், இப்படி இரண்டு திருக்கரத்தோடு இருந்துதான் பின்னர் நான்கு திருக்கரங்களோடு எழுந்து, நடந்து, நின்று, நடமாடி, மூஷிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்து கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர்முடிவு செய்யலாம்தானே. - இத்தோடு இந்தக் கோயிலில் இருக்கும் இரண்டு செப்புச் சிலைகள் மிக்க அழகுவாய்ந்தவை. அவைதாம் சுந்திரசேகர மூர்த்தியும், அவரது துணைவியும். நல்ல சோழர் காலத்துச் சிலை. ஆயிர வருஷ காலத்துக்கு முன்பே உருவாகி இருக்க வேண்டும். நிற்கும் நிலையையும் மணி மகுடத்தையும் பார்த்ததுமே எளிதாகச் சொல்லிவிடலாம். மானும் மழுவும் தாங்கி, பிறையும் மகுடமும் அணிந்து, அபயகரத்தோடு அருள்பாலிக்கும் திருஉருவாக அமைந்திருக்கிறார் இறைவன். ஆணுக்குப் பெண் அழகு என்பது போல் அன்னைபார்வதி அவரை விட் அழகாக இருக்கிறாள். ஆடையும் அணியும் அவள் அற்புத செளந்தர்யத்தை அதிகப்படுத்தவில்லைதான். அவள் நிற்கின்ற ஒயிலிலே காம்பீர்யம் இருக்கிறது. ஒர் அழகு சுடர் விடுகிறது. பிள்ளையார்பட்டிக்குச் சென்று நேரில் காணும் வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டால் இவர்களை எல்லாம் கண்டு தொழலாம். கற்பக விநாயகரிடமும் பிரார்த்தித்துக் கொள்ளலாம். ஏன் கோபுரதரிசனமும் பண்ணலாம், செல்பவர்கள் எல்லோரும்.