பாரதம் எழுதிய பிள்ளையார் 氮9 இந்தப் பிள்ளையாரைப் பற்றித் தான் எத்தனை எத்தனை கதைகள், சிவபுராணம், விநாயக புராணம், காஞ்சிப் புராணம், முதலிய நூல்களில் ஒரு சில கதைகள் ரஸமானவை, நல்ல அனுபவத்தின் அடிப்படையிலே உருவானவை; சிறந்த உண்மைகளை உணர்த்துபவை. அவைகளைத் தெரிந்து கொள்ளலாம்தானே. நம் நாட்டின் இதிகாசங்கள், இராமாயணம், பாரதம் என்பதை எல்லோரும் அறிவர். பாரதத்தை இயற்றியவர் வியாசர் என்பதையும் தெரிவோம். அந்த வியாசருக்குக் கற்றுச் சொல்லியாக அமைந்து, பாரதத்தையே எழுதியவர் விநாயகர் என்பது வரலாறு பாரதத்தை எழுதத் திட்டமிட்டார் வியாசர். அதை அவர் சொல்லும் வேகத்தோடு வேகமாய் விரைவாய் எழுத வேண்டுமே அதற்கு ஒர் ஆள் தேடினார். நல்ல அறிவுடைய பிள்ளை, ஆற்றல் மிகுந்த பிள்ளை, விநாயகரையே தேர்ந்தெடுத்தார். எண்ணாயிரத்து எண்ணுறு சுலோகங்கள், விரைவாகச் சொல்லிக் கொண்டே போனார் வியாசர் எழுதிக் கொண்டே வந்தார் விநாயகர் இடையே எழுதுகோல் கூர் மழுங்கி எழுத்து வேகம் தடைப்பட்டது. ஆனால் ஏகாக்கிர சித்தத்தோடு சுலோகங்களைச் சொல்லிக்கொண்டு வந்த வியாசரோ நிறுத்த வில்லை. விநாயகரோ அவரது உணர்ச்சி வேகத்தைத் தடை செய்ய விரும்பவில்லை. எழுத்தாணி கூர் மழுங்கியதை அப்படியே துர எறிந்துவிட்டு, தன்னுடைய கொம்புகளில் ஒன்றையே ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு தொடர்ந்து எழுதி முடித்தார் பாரதத்தை. நல்ல ரஸமான கதை. சோர்வில்லாமலே எக்காலத்தும் பிள்ளைகள் படிக்கவும் எழுதவும் வேண்டும் என்று எடுத்துக் காட்டும் நல்ல பிள்ளையாக அல்லவா பிள்ளையார் அமைந்து விடுகிறார். அதனால்தான் பிள்ளையார் இன்றும் பிள்ளைகளின் தெய்வமாகவே வாழ்கிறார்; வணங்கப்படுகிறார். ஏர்பூத்த ஒருகோட்டால் இலகு பாரத மேரு இடத்தே தீட்டும் போர் பூத்த நெடுந்தடக்கைப் பொல்லாத பிள்ளை பதம் . போற்றல் செய்வாம் -நெல்லையப்பபிள்ளை.
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/36
Appearance