பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பிள்ளைகளுக்கு உகந்தவராக மட்டும் பிள்ளையார் இல்லை. நாட்டு மக்களுக்கும் நல்லவராக நடந்திருக்கிறார். கங்கை யென்னும் கடவுள்த் திருநதியையே காவிரியாகத் தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தவரும், அதனால் நாடுநலம் பெறச் செய்தவரும் அவரேதான். கதை இதுதான். கயிலை மலையிலே திருக்கல்யாணம், பார்வதி தேவிக்கும் பரமசிவனுக்கும் தேவர்களும் மற்றவர்களும் திருமணம் கான கூடிவிட்டார்கள் அங்கே. அதனால் வடநாடு தாழ்ந்து தென்னாடு தூக்கி விட்டது. நாடு சமன் செய்யப்படவேண்டும் உடனே என்று கருதினார் பரமசிவன். கல்யாணத்துக்கு வந்த விருந்தினர்களை திருப்பியனுப்புவதோ இயலாத காரியம். ஆதலால் தன்னையொத்த தவவலிமை உடைய அகத்திய முனிவரையே தென் திசை செல்லுமாறு பணித்தார். அகத்தியரும், புறப்படும் போது பரமசிவனது திருமுடியில் உள்ள கங்கையை தன் கமண்டலத்தில் ஏந்தி தன்னுடன் கொண்டு வர மறக்கவில்லை. வருகிற வழியில் நித்திய கர்மங்களை முடிக்க வேண்டி தன் கமண்டலத்தை தரையில் வைத்தார். சமயம் பார்த்துக் கொண்டிருந்த விநாயகர், இதுதான் தக்க தருணம் என்று எண்ணி, காக உருவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். ஒடிப் பெருகியது கங்கை தமிழ் நாட்டில். காகத்தால் விரிக்கப்பட்ட கங்கைதான் அன்று முதல் காவிரியானாள் தமிழ் நாட்டில் 'காகம் கவிழ்த்த காவிரிப் பாவை’ எனப் பாடப்பெறும் பேறும் பெற்ற்ாள். இதனால் நாடு வளம் உற்றது : சோழ வளநாடு சோறு பெற்றது. ஆம். எல்லாம் விநாயகர் அருளினால்த்தான். பரிந்தார்க்கு அருளும் பரிசுங் கண்டேன் பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன் விருந்தாய்ப் பரந்த - தொகுதி கண்டேன் மெல்லியலும் - விநாயகனும் தோன்றக் கண்டேன் - நாவுக்கரசர்