ஒளவை வணங்கிய பிள்ளையார் 21 தமிழ் நாட்டில் பிள்ளையாரை வணங்கி விடுபேறு பெற்றவர்கள் கதை அனந்தம் என்றாலும் வாழ்வோடு வாழ்வாக பிள்ளையாருடன் ஒட்டிக்கொண்டவள் ஒளவைப் பிராட்டி இளமையிலேயே பிள்ளையார் வணக்கம் அவள் உள்ளத்தில் ஊன்றி விட்டது. வேழமுக்த்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும் என்று தமிழ்நாட்டப் பிள்ளைகளுக்கெல்லாம் போதித்தவர் அவர்தான். “சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரைஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்குசிந்துரமும் அஞ்சு கரமும் அங்குசபாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப்புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே” என்றெல்லாம் பாடி விநாயக வணக்கத்தை தமிழர்கள் உள்ளத்தில் ஊன்றச் செய்வதரும் அவரே தான். அவர் முக்தியடைந்ததும் அந்தப் பிள்ளையார் மூலமே தான். ககைநல்ல அற்புதமான கதை. சேரமன்னன், சேரமான் பெருமாள் நாயனாரும் அவரது தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரும் நாட்டில் செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்தபின்னர், கயிலாயம் நோக்கிப் புறப்பட்டனர். இருவரும் சென்றனர் யானை மீதும், குதிரை மீதும் ஏறிக் கொண்டு. செல்லும் வழியிலே ஒளவையைக் கண்டனர். அந்த அம்மையையும் உடன்வர அழைத்தனர். அம்மையோ அப்போது விநாயகருக்குப் பூசை செய்து கொண்டிருந்தார். நண்பர்களுடன் எளிதாகக் கயிலாயம் செல்லலாமே என்ற ஆசை ஒளவையாருக்கு. ஆதலால் விரைவிலேயே பூசையை நடத்திவிட முனைந்தார். ஒவையாரின் அவசரத்தை அறிந்த பிள்ளையார்
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/38
Appearance