ஒளவை வணங்கிய பிள்ளையார் 22 ஏன் பாட்டி இத்தனை அவசரம் இன்று?’ என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னார் ஒளவையார். அடடா இதுதானா? உன் நண்பர்களைப் போகச் சொல். அவர்கள் அங்கு செல்லுமுன் நான் உன்னை கயிலாயம் கொண்டு சேர்க்கிறேன் என்றார். அவசரப்பட்ட சேரமானும் சுந்தரரும் சென்று விட்டார்கள். அம்மையும் நிதானமாகவே பூசை செய்தார். பூசை முடிந்ததும், அப்படியே அம்மையை தன் தும்பிக்கையாலேயே அநாயாசமாகத் தூக்கி, கயிலாயத்திலே இறக்கி விடுகிறார் பிள்ளையார் ஒளவையாரும் கயிலாய வாசலிலே நின்று முன் சென்ற சேரமானையும் கந்தரரையும் வருக! வருக!' என வரவேற்கிறார். எப்படி, இந்த ஒளவையார் தமக்கு முன் கயிலாயம் வந்து சேர்ந்தார் என்று அறியாது திகைத்தனர் இருவரும். ஆம், பிள்ளையாரைப் பின்பற்றினால் கயிலாயம் சேர்வது எளிதாகவும் இருக்கும் விரைவாகவும் நடக்கும் என்று தெரிந்தனர். அவர்கள் இருவரும் அன்று. அதையே நாமும் தெரிந்து கொள்கிறோம் இன்று. - - மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிர நினைய வல்லார்க்கு அரிதோ? முகில் போல் முழங்கி, அதிர நடந்திடும் யானையும் தேரும் அதன்பின் வரும் குதிரையும் காதம், கிழவியும் காதம் குலமன்னனே! - ஒளவையார்
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/39
Appearance