உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை கண்டவர் 23 இன்னுமொரு கதை, சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரிலே உள்ள பிள்ளையார் பொல்லாப் பிள்ளையார் பொல்லா என்பதனால் அவர் ஒரு பொல்லாத பிள்ளை அல்ல. சிற்றுளியால் பொள்ளப்படாத சுயம்பு மூர்த்தி என்பதனால்த்தான், அவரைப் பொள்ளாப் பிள்ளையார் என்று மக்கள் அழைத்தனர். நாளாவட்டத்தில் பொல்லாப்பிள்ளையாகவே மாறிவிட்டார். உலக வழக்கில். ஆனால் இந்தப் பொல்லாப் பிள்ளை செய்த பொல்லாத வேலை காரணமாகவே, நமக்குத் தெய்வம் மணக்கும் தேவாரப் பாக்கள் எல்லாம் கிடைத்திருக்கின்றன். திருநாரையூரிலே பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்தவர் ஒர் அந்தணர். ஒரு நாள வெளியூர் செல்ல விரும்பியபோது தன் மகனை பூசை செய்யும் படி பணித்துவிட்டுச் சென்றிருந்தார். பிள்ளை என்னத்தைக் கண்டான்? பூசையை முடித்து, நைவேத்தியத்தை பிள்ளையார் முன் வைத்து அவர் அதை உண்ண வேண்டினான். அசையாது கல்லுப் பிள்ளையாராக இருந்தார் பொல்லாப் பிள்ளையார் பார்த்தான். அந்தணச் சிறுவன். உண்ணுகின்றிரா, இல்லாவிட்டால் உமது திருவடியிலே என் தலையை மோதி உடைத்துக்கொள்ளவா? ன்ன்றான். இப்படிச் சும்மா பயங்காட்டவில்லை. உண்மையாகவே தன் தலையை மோத முனைந்துவிட்டான். பார்த்தார் பிள்ளையார், தும்பிக்கையை நீட்டி, வாயைத் திறந்து அவன் தந்த நைவேத்தியத்தை எல்லாம் வாங்கி வாங்கி உண்டார். இதை, ஊர் திரும்பிய தந்தை நம்பவில்லை முதலில் மறுநாள் மறைந்திருந்து நிகழும் அற்புதத்தைக் கண்டார். அவ்வளவுதான் பொல்லாப் பிள்ளையாருக்கு அமுதுட்டிய அந்தணச் சிறுவன் நம்பியாண்டார் நம்பியாகி விடுகிறான். சோழ மன்னன் ராஜராஜன் இந்த நம்பியை வந்து கண்டு வணங்குகிறான். அவன் ஆர்வம் தீர, அந்தப் பிள்ளையாரே நம்பியிடம் திருமுறைகள் இருக்கும் இடத்தையும், அதைப் பெறும் வகையையும் எடுத்துரைக்கிறார். சிதம்பரத்திலே சமயகுரவர் மூவரும் கைச்சாத்திட்டு வைத்திருந்த அறையில் இருந்த திருமுறை அம்பலத்துக்கு வந்துவிடுகிறது. நாட்டுக்கு வேண்டிய அற்புதமான பாக்கள் அனைத்தும் கிடைத்து விடுகிறது. நமக்கு. பொல்லாப் பிள்ளையாரும் திருமுறை கண்ட பிள்ளையார் என்று புதிய பட்டத்தையும் தட்டிக்கொண்டு போய்விடுகிறார். நாடு நலம் பெற, காகம் கவித்து காவிரி கொணர்ந்தவரே, மக்கள் உள்ளம் இறைவனிடம் ஈடுபடத் திருமுறைகளையும் தேடியெடுத்துக் கொடுத்துவிடுகிறார்.