முடிப்புரை 28 கதைகளை கதைகள் என்ற அளவில் மட்டும் படிக்காமல், கதை எந்த அடிப்படையில், எந்தத் தத்துவத்தை விளக்க எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வோமானால், தெரிந்துகொள்ள முயல்வோமானால் . சமய உலகில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்துவிடும். தமிழன் கண்ட கடவுள், ஏதோ ஒரு நாளில், ஒரு வருஷத்தில் உருவானவர் அல்ல. நீண்ட காலமாக கலைஞர்கள் சிந்தித்துச் சிந்தித்து உள்ளக்கிழியில் உரு எழுதி' அதன்பின் தான் பாக்களில், சித்திரத்தில் சிற்பத்தில் எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி உருவானவர்களில் தலை சிறந்தவர்தான் ஆனைமுகப் பெருமான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் ஏன்? கடல் கடந்தும் சென்று மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் இடம் பெற்றிருக்கிறார் அவர் நாட்டுக்கு நாடு அவர் வேறு வேறு திரு உருவங்களில் அமைந்திருக்கிறார் என்றால் அது அந்த அந்த நாட்டு மக்களின் சிந்தனையிலும், கற்பனையிலும் உருவான தோற்றங்கள்தான். கற்பனை கற்பித்த கடவுளாம் கற்பக விநாயகர் அவரவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை யாகத்தானே கோலம் கொள்ள முடியும் அருள்பாலிக்க இயலும். இந்த விநாயக தத்துவத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம். இவ்வளவிலாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன். பெருவரங்கள்தரும் தேசி விநாயகப் - பிள்ளையார்பதம் பணிந்து திருவீங்கைக்குடி மகாதேவர்அவர் திருத்தாள்வணங்கி, மேலும் அருள்மருதங்குடிநாயனார்.அவர்தம் அடிமலர்கள் சேவித்து, என்றும் மருள் கடிந்த சிவகாமி யொடுவாடா மலர்மங்கை அருள் கொள்வோமே - சா. கணேசன்
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/43
Appearance