உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆலயப் பிரவேசச் சட்டம் (Temple Entry Act) apg5Sorøm & Gorgot 56ir இல்லாமல் எல்லோருக்கும் அவர் ஸ்வாதீனம்: பிரகாரங்கள் எல்லாம் தாண்டி உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற ஸ்வாமிகளைவிட, இப்படி எங்கு பார்த்தாலும் நட்ட நடுவில் உட்கார்ந்திருக்கிற பிள்ளையார் தான் தப்பாமல் ஜனங்களை இழுத்துத் தோப்புக் கரணம் வாங்கிக் கொண்டு வருகிறார்: பிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது,தோப்புக் கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார் ஒருவருக்கே உரியவை. பிள்ளையார் சந்நிதியில், இரண்டு கைகளையும் மறித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். இப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப் பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரிதோப்புக் கரணம் போட வேண்டும். இவை எதற்கு என்றால்? யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால் எப்படி மனஸையும் நல்லதாக மாற்றிக் கொள்ளலாம் என்று வழி சொல்லியிருக்கிறது. நம் உடம்மைப் பல தினுசாக வளைத்துச் செய்கிற அப்பியாஸங்களால், சுவாஸ்த்தின் சுதியில் உண்டாக்கிக் கொள்கிற மாறுதல்களால் நம் உள்ளம் உயர்வதற்கான வழி அந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது இவற்றால் நம் நாடிகளில் சலனம் மாறும் மனஸில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும். நம்பிக்கையோடு செய்தால் பலன் தெரியும். - குழந்தைகளுக்காக நீதி நூல்களைச் செய்த அவ்வையார் பெரியவர்களுக்குக் கூட எளிதில் புரியாத பெரிய யோக தத்துவங்களை வைத்துப் பிள்ளையார் மீதே ஸ்தோத்திரம் செய்திருக்கிறாள். அதற்கு “விநாயகர் அகவல்” என்று பெயர். அளவில் சின்னதுதான் அந்த அகவல் ஸ்தோத்திரம், பிள்ளையாரை நினைக்கிறபோது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரஹம் கிடைக்கும். விநாயகர் அகவலைச் சொன்னால் இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் நினைத்ததாகும். எல்லோரும் இதைச் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமைதோறும் பக்கத்திலுள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாயகர் அகவல்” சொல்லி விக்நேச்வரனுக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும்.