இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிற்சேர்க்கை 1 3{} அதனால்தான் புத்தமதம், ஜைனமதம் எல்லாவற்றிலும் கூட அவரை வழிபடுகிறார்கள். தமிழ் நாட்டிலிருப்பது போல் மற்ற ராஜ்யங்களில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் விநாயகர் இல்லாவிட்டாலும்கூட, பாரத தேசத்திலுள்ள அத்தனை ஸ்தலங்களிலும் ஓரிடத்திலாவது அவர் இருப்பார். “கன்யாகுமரியிலும் பிள்ளையார் ஹறிமயத்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்” என்று ஒரு கணபதி பக்தர் என்னிடம் பெருமைப்பட்டுக் கொண்டார். நம் தேசத்தில் மட்டும்தான் என்றில்லை. ஐப்பானிலிருந்து மெக்ஸிக்கோ வரை, உலகத்தின் எல்லாத் தேசங்களிலும் விநாயகர் விக்கிரஹம்அகப்படுகிறது. லோகம் பூராவும் உள்ள ஸகல நாடுளிலும் அவரைப் பல தினுசான மூர்த்திகளில் வழிபடுகிறார்கள். அப்படி லோகம் முழுவதற்கும் சொந்தமாக இருக்கப்பட்டவரை நாம் எல்லோரும் தவறாமல் ஆராதிக்கவேண்டும். நன்றி - தெய்வத்தின் குரல்